|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 December, 2011

கணவர் என நினைத்து வேறொருவரின் பைக்கில்...

நெல்லை நகரில் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கடந்த 7-ந்தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நெல்லை நகரில் தற்போது 85 சதவீதத்திற்கும் அதிகமான வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து செல்கிறார்கள். இந்நிலையில் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஒருபெண், தனது கணவர் எனநினைத்து வேறொருவரின் மோட்டார் சைக்கிளில் ஏறிச்சென்றுவிட்டார். நெல்லை டவுனில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் நேற்று இரவு ஏராளமான இருசக்கர வாகன ஓட்டிகள், தங்களது வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டனர். அவர்களில் ஏராளமானோர் மனைவியுடன் வந்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் கரண்ட் இல்லை. 

இந்நிலையில் மனைவியுடன் வந்திருந்த ஒருவர் தனது வாகனத்திற்கு பெட்ரோல் போட்டு முடித்ததும், தன்னுடைய மனைவியை பைக்கில் ஏறுமாறு கூறினார். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால், அங்கு நின்றுகொண்டிருந்த மற்றொருவரின் மனைவி, தனது கணவர் என நினைத்து, அவரது மோட்டார்சைக்கிளில் ஏறிவிட்டார். இதனைத்தொடர்ந்து அந்த நபரும், தனது மோட்டார் சைக்கிளை அங்கிருந்து கிளப்பினார். இதனையறியாத அந்த பெண்ணின் கணவர், தனது மனைவியை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
 
உடனே அவர் தனது மனைவியின் செல்போனுக்கு போன் செய்தார். அப்போது அந்த பெண், “உங்களுடன் வரும்போதே எனக்கு ஏன் போன் செய்கிறீர்கள்” என்று கேட்டுள்ளார். உடனே அந்தநபர் “நான் எங்கு போன் செய்தேன்” என்று கேட்டவாறு பின்னால் திரும்பி பார்த்தார். அவர் தனது மோட்டார்சைக்கிளில் வேறொரு பெண் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தனது மனைவி என நினைத்து வேறொருபெண்ணை அழைத்துவந்ததை அந்த வாகன ஓட்டியும், தனது கணவர் என நினைத்து வேறொரு நபருடன் பைக்கில் சென்றதை அந்த பெண்ணும், தெரிந்துகொண்டனர். உடனே நடந்த சம்பவம் குறித்து, அந்தபெண் தனது கணவருக்கு போன்செய்து மேம்பாலம் அருகே வரவழைத்தார்.
 
அங்கு அந்த பெண்ணின் கணவர் வந்தார். பின்பு தனது மனைவியை அழைத்துச்சென்றார். அதன்பிறகு அந்த வாகன ஓட்டி பெட்ரோல் பங்க்கிற்கு சென்று, அங்கு தவித்தபடி நின்ற தனது மனைவியை அழைத்துக்கொண்டு பயணத்தை தொடர்ந்தார். கரண்ட் கட் ஆகியிருந்தது, இருவரது மேடாட்டார்சைக்கிளும் ஒரே கம்பெனி வாகனங்கள், இருவரும் ஹெல்மெட் அணிந்திருந்தது ஆகிய மூன்று காரணங்ககளும் சேர்ந்து ஒரு கலாட்டா காமெடியை ஏற்படுத்திவிட்டன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...