|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 December, 2011

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ஏப்ரல் முதல் வாரத்தில் துவக்க தேர்வுத்துறை திட்டம்! பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, மார்ச் கடைசி வாரத்தில் இருந்து துவக்குவதற்குப் பதில், ஏப்ரல் முதல் வாரத்தில் துவக்க, தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. வழக்கால் தாமதம்: நடப்பு கல்வியாண்டில், சமச்சீர் கல்வி வழக்கு, பள்ளி தள்ளிவைப்பு ஆகியவற்றால், 183 பள்ளி வேலை நாட்களில், 60 நாட்கள் இழப்பு ஏற்பட்டன. இதனால், வழக்கமான கால அட்டவணைக்குள், பாடத் திட்டங்களை முடிக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஈடுசெய்த 48 நாட்கள்: இதை ஈடுகட்ட, அரசுப் பள்ளிகள் உட்பட அனைத்து வகையான பள்ளிகளும், மாதத்திற்கு இரண்டு சனிக்கிழமைகளில் இயங்க உத்தரவிடப்பட்டது. இதன்மூலம், 17 நாட்கள் கூடுதலாகக் கிடைத்தன. மேலும், காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில், 10 நாட்கள் பள்ளிகள் நீட்டிப்பு மற்றும் 10 நாள் தேர்வு விடுமுறை ஐந்து நாட்களாகக் குறைப்பு ஆகிய நடவடிக்கைகள் மூலம், 15 நாட்களும்; பள்ளிகள் முடியும் நேரத்தை, அரை மணி நேரம் நீட்டிப்பு செய்ததன் மூலம், 16 நாட்கள் என, 48 நாட்கள் ஈடு செய்யப்பட்டுள்ளன.
இன்னும், 12 நாட்களை ஈடுசெய்ய வேண்டிய நிலை, பள்ளிக் கல்வித் துறைக்கு உள்ளது. பள்ளிக் கல்வித்துறை இவ்வளவு நடவடிக்கை எடுத்தாலும், மாணவர்கள் மத்தியில் ஒருவித பீதி இல்லாமல் இல்லை.ஆரம்பத்தில் இருந்தே தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டதால், பொதுத் தேர்வை நன்றாக எழுத முடியுமா என்ற பயம், மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, 10ம் வகுப்பு பொதுத் தேர்வை, வழக்கமான அட்டவணையில் இருந்து, ஒரு வாரம் தள்ளி வைக்க, தேர்வுத் துறை திட்டமிட்டுள்ளது.கடந்த பொதுத்தேர்வு, மார்ச் 28ல் துவங்கி, ஏப்ரல் 11ம் தேதி முடிந்தது. இந்த ஆண்டு தேர்வை, மார்ச் கடைசி வாரத்திற்குப் பதில், ஏப்ரல் முதல் வாரத்தில் துவக்கி, 20 தேதிக்குள் முடிப்பது குறித்து, தேர்வுத் துறை ஆலோசித்து வருகிறது. இதுகுறித்து தேர்வுத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, "கல்வியாண்டு துவங்கியதில் இருந்தே, மாணவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டன. பாடங்களை மீண்டும் ஒரு முறை மாணவர்கள் படிக்கவும், மனதளவில் மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வாய்ப்பு கொடுக்கும் வகையிலும், மார்ச் கடைசி வாரத்திற்குப் பதிலாக, ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்வுகள் துவங்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு வாரம் தள்ளி வைப்பதால், எவ்வித பிரச்னையும் ஏற்படாது&'&' என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...