|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 January, 2012

ஐ.பி.எல். டுவென்டி20 கிரிக்கெட் தொடர் அட்டவணை வெளியீடு!

 5வது ஐ.பி.எல். டுவென்டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஏப்ரல் 4ம் தேதி முதல் துவங்குகிறது. மொத்தம் 54 நாட்களில் 76 போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி மே 27ம் தேதி நடைபெறுகிறது. இந்தியன் பிரிமியர் லீக்(ஐ.பி.எல்.) சார்பில் ஆண்டுதோறும் டுவென்டி 20 கிரிக்கெட் தொடர் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டுக்கான 5வது ஐ.பி.எல். தொடர் ஏப்ரல் 4ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் துவங்குகிறது.

இந்த தொடருக்கான அட்டவணையை நேற்று மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) அறிவித்தது. சென்னையி்ல் நடக்க உள்ள முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி கொள்ள உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் உட்பட 9 அணிகள் பங்கேற்க உள்ளன. கடந்த ஐ.பி.எல். தொடரில் அறிமுகமான கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, நீக்கப்பட்டதால், இந்த ஐ.பி.எல். தொடரில் பங்கேற்காது. மொத்தம் 72 லீக் போட்டிகளும், 3 தகுதிச் சுற்று போட்டிகளும், இறுதிப் போட்டி உட்பட மொத்தம் 54 நாட்களில் 76 போட்டிகள் நடக்க உள்ளது.

5வது ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியும், இறுதிப் போட்டியும் சென்னையில் மைதானத்தில் நடக்க உள்ளது. லீக் போட்டிகளில் ஒவ்வொரு அணியும் எதிரணி உடன் 2 முறை விளையாடும் இதில் 1 போட்டி உள்ளூரிலும், இன்னொரு போட்டி வெளியூரிலும் நடைபெறும். லீக் போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் தகுதிச் சுற்று தகுதிப்பெறும். தகுதிச் சுற்றில் வெற்றிப் பெறும் 2 அணிகள் இறுதிப் போட்டியில் பங்கேற்கும். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஏப்ரல் 4, 7, 10, 12, 14, 19, 21, 25, 28, 30 மற்றும் மே 4, 6, 10, 12, 14, 17 உள்ளிட்ட தேதிகளில் நடக்கும் லீக் போட்டிகளில் விளையாட உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...