தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கு இந்திய நாட்டின் கடல் எல்லையை முதலில் வரையறுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை அதிபரின் மைத்துனரைத் தாக்கியதாக கைது செய்யப்பட்டு ராமேஸ்வரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் 11 பேரை அவர் இன்று நேரில் சந்தித்து பேசினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:554 மீனவர்களை சுட்டுக் கொன்று தினமும் தமிழக மீனவர்களை துன்புறுத்தி வரும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியா வரும்போது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது. நான் திருடவில்லை. கொலை செய்யவில்லை. தவறு எதுவும் செய்யாத என்னை விமானநிலையத்தில் வைத்து அமெரிக்கா திருப்பி அனுப்பியது.தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றவர்கள் நமது நாட்டுக்குள் சர்வசுதந்திரமாக வந்துசெல்கின்றனர். இலங்கை அதிபர் ராஜபட்சவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் ராமேஸ்வரம் வரும்போது நாம் தமிழர் கட்சியினர் ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை யாரும் தாக்கவில்லை. இதை அவரே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கையில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் இதை அரசியலாக்குகின்றனர்.இவ்வாறு சீமான் தனது பேட்டியில் ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
13 January, 2012
இந்தியாவின் கடல் எல்லையை வரையறுக்க வேண்டும் சீமான்!
தமிழக மீனவர்கள் தாக்கப்படாமல் இருப்பதற்கு இந்திய நாட்டின் கடல் எல்லையை முதலில் வரையறுக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை அதிபரின் மைத்துனரைத் தாக்கியதாக கைது செய்யப்பட்டு ராமேஸ்வரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சியினர் 11 பேரை அவர் இன்று நேரில் சந்தித்து பேசினார்.பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:554 மீனவர்களை சுட்டுக் கொன்று தினமும் தமிழக மீனவர்களை துன்புறுத்தி வரும் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்தியா வரும்போது சிவப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்படுகிறது. நான் திருடவில்லை. கொலை செய்யவில்லை. தவறு எதுவும் செய்யாத என்னை விமானநிலையத்தில் வைத்து அமெரிக்கா திருப்பி அனுப்பியது.தமிழக மீனவர்களை சுட்டுக் கொன்றவர்கள் நமது நாட்டுக்குள் சர்வசுதந்திரமாக வந்துசெல்கின்றனர். இலங்கை அதிபர் ராஜபட்சவின் மைத்துனர் திருக்குமரன் நடேசன் ராமேஸ்வரம் வரும்போது நாம் தமிழர் கட்சியினர் ஜனநாயக முறைப்படி எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை யாரும் தாக்கவில்லை. இதை அவரே செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அப்படி இருக்கையில் காங்கிரஸ் கட்சியினர் சிலர் இதை அரசியலாக்குகின்றனர்.இவ்வாறு சீமான் தனது பேட்டியில்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment