|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 February, 2012

சேனல் - 4 : புதிய ஆவணப் படம் அடுத்த மாதம் முதல் வாரத்தில்!


இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் மேலும் ஒரு ஆவணப்படத்தினை அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடவுள்ளது.‘இலங்கையின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்ட ஜோன் சினோ என்ற செய்தி வெளியீட்டாளரே இந்த ஆவணப்படத்தையும் வெளியிடவுள்ளார். இந்த நிலையில், ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆவணப்படம் வெளி யிடப்படவுள்ளதாக இலங்கை அரசு வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

சேனல்-4 தொலைக்காட்சி இந்த ஆண்டுக்கான தமது நிகழ்சித் தயாரிப்பு தொடர்பாக வெளியிட்ட தகவலில், ‘இலங்கையின் கொலைக்களங்கள்‘ ஆவணப்படத்தின் இரண்டாவது பாகத்தை - புதிய போர்க்குற்ற ஆதாரங்க ளுடன் வெளியிடப் போவதாக தெரிவித் திருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...