|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 February, 2012

பதவியிலிருந்து அகற்ற சில வெளிநாட்டு சக்திகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக?

தம்மை பதவியிலிருந்து அகற்ற சில வெளிநாட்டு சக்திகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக இலங்கை அதிபர் ராஜபட்ச தெரிவித்துள்ளார்.கடவத்தை பிரதேசத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைத்த போது ராஜபட்ச இவ்வாறு குறிப்பிட்டார்.யார் என்ன சூழ்ச்சி செய்தாலும் தமக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றிய பின்னரே தான் பதவியை விட்டு விலகுவேன் என அவர் தெரிவித்தார்.எரிபொருள் விலையேற்றம் குறித்து குழப்பமடையத் தேவையில்லை எனத் தெரிவித்துள்ள ராஜபட்ச சர்வதேச சந்தை நிலைமையின் அடிப்படையில், எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டாலும்  நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டியவர்களுக்கு அதற்கான மானியங்கள் வழங்கப்படும் என அவர் உறுதி அளித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...