|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 February, 2012

போலீசார் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமோழிய, வன்முறை உருவாக காரணமாக அமைந்து விடக்கூடாது சுப்ரீம் கோர்ட்


 போலீசார் நாட்டில் அமைதியை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டுமோழிய, வன்முறை உருவாக காரணமாக அமைந்து விடக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் 4 மற்றும் 5 தேதிகளில் கறுப்பு பணம் மீட்டு கொண்டு வரக்கோரி டில்லியில் டில்லி ராம்லீலா மைதானத்தில் யோகாஉண்ணாவிரத போராட்டம் நடத்தினார். மைதானத்தில் இரவில் தூங்கி கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் போலீசார் களம் இறங்கினர். இது போலீசாருக்கும், கூடியிருந்தவர்களுக்கும் இடையே கைகலப்பாக மாறியது. தொடர்ந்து தடியடி நடத்தப்பட்டது. இதில் பலர் காயமுற்றனர். ராம்தேவ் மேடையில் இருந்து குதித்து ஆதரவாளர்களுடன் கலந்து போலீசார் பிடியில் இருந்து தப்பினார். ஒருவர் பலியானார்.

போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதாகவும், ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதாகவும் ராம்தேவ் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.,சவுகான் மற்றும் சுவாதந்தர் ஆகியோரை கொண்ட பெஞ்ச் விசாரித்து. இன்று தங்களுடைய தீர்ப்பில் ; இந்த சம்பவத்தில் பலியான குடும்பத்தினைர சேர்ந்த ராஜாபாலா என்பவரது குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், பலமான காயமுற்றவர்களுக்கு நிவாரணமாக ரூ. 50 ஆயிரமும், லேசான காயமுற்றவருக்கு ரூ. 25 ஆயிரமும் வழங்க வேண்டும். நாட்டில் ஒரு பிரச்னை இருக்கிறதென்றால் இந்த இடத்தில் போலீசார் அதிகபட்சமாக அமைதியை உருவாக்க முயற்சிக்க வேண்டும். அத்துமீறி அங்கு ஒரு வன்செயல்கள் நடக்க காரணமாக அமைந்து விடக்கூடாது.இந்த போராட்டத்தை பொறுத்தவரை அடிப்படையான உரிமையுடன் கூடிய போராட்டம் . இதனை நசுக்க முயற்சிக்க கூடாது. மக்களுக்கும், மக்களை ஆளும் அரசுக்கும் இடையே நம்பிக்கை குறைந்தததை காட்டுகிறது. அதே நேரத்தில் ராம்தேவ் ஆதரவாளர்களும் வன்முறையில் ஈடுபட்டத கண்டிக்கத்தக்கது என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக பத்திரிகைகள் மற்றும் மீடியாக்களில் வெளியான செய்திகள், கிளிப்பிங்ஸ்கள் ஆகியவற்றை கோர்ட் ஆதாரமாக எடுத்து கொண்டது.

கோர்ட் தீர்ப்பு : மத்திய அரசுக்கு கண்டனம்: அடிப்படை உரிமை மறுக்கப்பட்டதன் அம்சத்தை கோர்ட் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு மாநில போலீசாரும், மத்திய அரசும் தான் பொறுப்பு என பா.ஜ., மூத்த நிர்வாகிகள் , ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி, பிரபல வக்கீல் ராம்ஜெத்மலானி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து ராம்ஜெத்மலானி கூறுகையில் : இந்த வழக்கு பாபா ராம்தேவுக்கு வெற்றியாக அமைந்துள்ளது. அவர் பக்கம் நியாயம் இருப்பது கண்கூடாக தெரிய வருகிறது . உள்துறை அமைச்சகத்தின் மூலம் வந்த உத்தரவே மக்களை வெளியேற்ற காரணமாக இருந்தது. இதனால் உள்துறை அமைச்சர் சிதம்பரம் ராஜினாமா செய்ய வேண்டும் என்றார். இது குறித்து பாபா ராம்தேவ் கூறுகையில்:ராம்லீலா மைதானத்தில் அமைதியை பின்பற்ற வேண்டும் என்றுதான் எனது தொண்டர்களிடம் கூறியிருந்தேன். யாரையும் நான் தூண்டும்படி நடந்து கொள்ளவில்லை. என்னை வேண்டுமானால் கைது செய்யுங்கள் என்று கூறினேன் ஆனால் போலீசார் அதனை பொருட்படுத்தாமல் அனைவரையும் தாக்க துவங்கினர். அரசு அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்ற தவறக்கூடாது. 2 ஜி வழக்கு தீர்ப்பிற்கு பின்னர் மத்திய அரசுக்கு மேலும் ஓரு அடியாக இந்த தீர்ப்பு இருக்கும். உள்துறை அமைச்சகத்திடம் இருந்து மாநில போலீசார் நெருக்கடிக்கு உள்ளாயினர் என்பது தெளிவாகிறது என்றார். ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி இது குறித்து கூறுகையில்; இதற்கு முழுக்காரணமான சிதம்பரம் பதவி விலக வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...