|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 February, 2012

மும்பையில் தமிழர் வசிக்கும் பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்கள் படுதோல்வி!


மும்பை மாநகராட்சி தேர்தலில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் தேல்வியை சந்தித்தனர்.மும்பை மாநகராட்சிக்கு கடந்த 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் தமிழர் அதிகம் வசித்த பகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களைத் தோற்கடிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி முதல் பல்வேறு தமிழ் அமைப்புகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்தது.

இதனையடுத்து அப்பகுதிகளில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 13ம் தேதி பிரச்சாரம் செய்தார். இந்த நிலையில் தாராவியில் முஸ்லீம்கள் அதிகம் வாக்காளர்களாக உள்ள ஒரு வார்டைத் தவிர மற்ற 6 வார்டுகளிலும் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இந்தத் வார்டுகளில் சிவசேனா கூட்டணி வேட்பாளர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர்.இதேபோல் சயான் கோல்லிவாடாவில் 168 வட்டத்தில் போட்டியிட்ட தமிழரான கேப்டன் தமிழ்ச்செல்வன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை 2,500 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த வார்டில் காங்கிரஸ் தோற்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடதக்கது. சீமானின் கனவு பலித்தது  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...