|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 February, 2012

அமெரிக்க சதிக்கு ரணில் துணை!

 இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்டுள்ள சதிக்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க துணை போவதாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும குற்றம்சாட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் இலங்கை அரசு நியமித்துள்ள போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைக் குழு குறித்து கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் மேற்குலக நாடுகளுக்கு சாதகமான அம்சங்களே இடம்பெற்றிருந்தன.இலங்கையில் எந்த ஊடகத்திலும் வெளிவராத இந்த அறிக்கை வெளிநாட்டு ஊடகங்களில் மட்டுமே பிரசுரமாகியிருந்தது. இது எப்படி?சில நாடுகள் மார்ச் மாதம் இலங்கையைப் பலி எடுக்கும் மாதம் என்கின்றன.இத்தகைய நாடுகள்தான் வியட்னாமிலும், ஆப்கனிலும் ஈராக்கிலும் போர்க் குற்றங்கள் புரிந்தவை. இந்த நாடுகளின் சதித் திட்டங்களுக்கு ரணிலும் துணை போகிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...