|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 February, 2012

கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில்...

காதல் என்பது ஒருவரை ஒருவர் நேசிப்பது. விரும்புவது. அன்பு செலுத்துவது. பிரியம் வைப்பது. பாசம் வைப்பது. இதற்கு பெயர்தான் காதல் என பெரியவர்கள் கூறுகின்றனர். ஆணுக்கும் பெண்ணுக்கும் வருவது மட்டும் காதல் இல்லை. தாய் பிள்ளைகளிடம் வைக்கும் பாசம். சகோதரன் சகோதரியிடம் வைக்கும் பிரியம். ஒருவன்  ஆண் அல்லது பெண் நண்பரிடம் வைக்கும் நேசம், ஒரு ஆண் ஒரு பெண்ணை மனதார விரும்புவது. தலைமையில் இருக்கும் ஒருவர் தனக்கு கீழ் இருப்பவரிடம் வைக்கும் அன்பு இப்படிப்பட்ட எல்லாமே காதல் தான்.  பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே பாசம் இல்லாமல் தவிப்பவர்களும், சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் இடையே பிரியம் இல்லாமல் வருத்தப்படுவர்களும். நண்பர்களுக்கிடையே நேசம் இல்லாமல் கவலைப்படுபவர்களும், ஆணும் பெண்ணும் ஒருவர் விரும்பி மற்றொருவர் விரும்பால் திரிபவர்களும், தலைமையும் கீழ் உள்ளவர்களும் ஒற்றுமையில்லையே என நினைப்பவர்களும் சென்று வழிபட வேண்டிய கோயில் நாகப்பட்டினம் மாவட்டம் கொருக்கை வீரட்டேஸ்வரர் கோயில் ஆகும்.  தாரகாசூரன் போன்ற அசுரர்கள் அழிய முருகனின் அவதாரம் தேவை. எப்போதுமே தியானத்திலிருப்பவர் சிவன். தேவர்கள் எல்லோரும் சேர்ந்து மன்மதனிடம் கூறி சிவன் மீது அம்பெய்து சிவனது தியானத்தை கலைக்க கூறினர். மன்மதனும் சிவன் மீது கணை தொடுக்க, கோபமடைந்த சிவன் மன்மதனை எரித்து விடுகிறார். பதறிப்போன ரதி தேவி, சிவனிடம் மடிப்பிச்சை கேட்க சிவனின் அருளால் மன்மதன் உயிர்ப்பிழைக்கிறான். சிவன் இத்தலத்தில் காமதகன மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார்.  காதலர் தினத்தன்று ஆண், பெண் காதலர்கள் தான் இந்த கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் என்பதில்லை. பாசம், பிரியம், நேசம், விருப்பம், அன்பு, ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கோயிலுக்கு சென்று இங்குள்ள காமதகன மூர்த்தியை வழிபட்டால் தங்களது விருப்பம் உடனே நிறைவேறும் என்பது நம்பிக்கை.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...