|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 February, 2012

கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம்!


வரும் கோடை காலத்தில் வெயில் 40 டிகிரி செல்சியஸ் அளவு வரை உயர்ந்து (104 டிகிரி பாரன்ஹீட்) சுட்டெரிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருவத்தில், மழை கிடைக்க வேண்டிய சராசரியை விட கூடுதலாக பொழிந்தது. குளிர் காலமும் மாறுபட்டிருந்தது. சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் குளிர் பருவத்தில் வரலாறு காணாத அளவில் கடும் பனிப்பொழிவு நிலவியது. இது ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களில் உள்ள பருவ நிலையை நினைவுப்படுத்தியது. பருவ நிலை மாற்றம் : ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் வரை மிதமான தட்பவெட்பம் நிலவுவது வழக்கம். இந்தாண்டு ஜனவரி மாதத்திலேயே வெயில் சுட்டெரிக்கத் துவங்கி விட்டது. வழக்கமாக, கோடை காலம் மார்ச் மாதம் துவங்கும். ஆனால், இப்போதே சுட்டெரிக்கும் வெயில் கோடை காலத்தை நினைவுப்படுத்துகிறது. இந்தாண்டு பருவ மழையில் ஏற்பட்ட மாற்றமே இதற்கு முக்கிய காரணம் என, வானிலை மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழகத்தில் சென்னை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தான் கோடை வெயில் கடுமையாக சுட்டெரிப்பது வழக்கம். கடந்தாண்டு உள்மாவட்டங்களிலும் வெயில் கொளுத்தியது. கடல் காற்று வீசியதால் கடலோர மாவட்டங்கள் ஓரளவுக்கு தப்பின.

மாலை 6 மணிக்கும் சுரீர் : கடந்தாண்டு கோடையில், மாலை 6 மணிக்கு கூட பகல் 12 மணி போல சுரீர் என்று வெயில் சுட்டது. புவி வெப்பமயத்தால், ஆண்டுதோறும் வெப்ப அளவு அதிகரித்து வருகிறது. இதனால், கடந்தாண்டை விட இந்தாண்டும் வெயில் அதிகமாக சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த 3ம் தேதி காலை குறைந்தபட்சமாக சென்னை, நுங்கம்பாக்கத்தில் அதிகபட்சமாக 29.4 டிகிரி செல்சியேசும், மீனம்பாக்கத்தில் 30.3 டிகிரி செல்சியேசும் வெப்பம் பதிவானது. இது சராசரியை விட அதிகம். கடந்த 4ம் தேதி அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 28.7 டிகிரியும், மீனம்பாக்கத்தில் 30.3 டிகிரியும் வெப்பம் பதிவாகியிருந்தது. பருவ நிலை மாற்றத்தால் இந்தாண்டு 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவு வரை சென்னையில் பதிவாக வாய்ப்புள்ளது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...