|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 February, 2012

ஒழுக்கத்தை காக்க போராடிய அண்ணன்!


திருப்பூர் மாவட்டம், அவினாசி பக்கம் உள்ள ஆனந்தகிரியை சேர்ந்தவர் ஆயயாச்சாமி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு வெள்ளியங்கிரி (வயது 21) என்ற மகனும், அம்பிகா (வயது 18) என்ற மகளும் உள்ளார்.அம்பிகாவுக்கும், பக்கத்து ஊரானா சுண்டக்காம்பாளையம் என்ற ஊரை சேர்ந்த சண்முகம் (வயது 22) என்பவருக்கும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது. திருமணமான ஒரே வாரத்தில் எனக்கு சன்முகத்துடன் வாழப் பிடிக்கவில்லை ஏற்று கூறிவிட்டு அம்பிகா தனது தந்தையார் வீட்டுக்கு வந்துவிட்டார். அம்பிகாவின் அப்பா அய்யாச்சாமி, அண்ணன் வெள்ளியங்கிரி ஆகியோர், மகளிடம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் கணவன் வீட்டுக்கு போகமாட்டேன் என்று சொல்லிவிட்டார் அம்பிகா. இதற்கிடையில் கடந்த வாரம் அம்ம்பிகாவின் கணவரின் ஊரான சுண்டக்காம்பாளையத்தில் இருக்கும் வடிவேல் என்பவரும், அம்பிகாவும்  காணாமல் போய்விட்டனர்.தனது மகளை வடிவேல் கடத்திக்கொண்டு போய்விட்டதாகவும், வடிவேலிடமிருந்து தனது மகளை மீட்டு கொடுங்கள் என்று அம்பிகாவின் தயார் பழனியம்மாள் அவினாசி அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்த புகாரின் பேரில் வடிவேலுவையும், அம்பிகாவையும் கண்டுபிடித்த ஆய்வாளர் குப்பு, நேற்று மதியம் அம்பிகாவையும் வடிவேலுவையும் காவல்நிலையத்துக்கு கூட்டிவந்து அவர்களை தனியாக விசாரணை செய்து கொண்டிருந்தார்.அப்போது, அம்பிகாவின் குடும்பத்தினரும் உடன் இருந்துள்ளார்கள். உனக்கும் சண்முகத்துக்கும் திருமணம் நடந்துள்ளது, நீங்கள் இருவரும் தான் சேர்ந்து வாழவேண்டும், அப்போது தான் உங்களுக்கு ஊரில் நல்ல மரியாதை இருக்கும். வடிவேலுவுடன் நீ சேர்ந்து வாழ்ந்தால் அது ஆரோக்கியமாக இருக்காது. ஊரில் உள்ளவர்கள் உன்னை தவறான கண்ணோட்டத்தில் தான் பார்ப்பார்கள் என்று அம்பிகாவுக்கு அறிவுறை கூறிக்கொண்டிருந்தார் ஆய்வாளர் குப்பு.

ஆய்வாளர் சொல்லுவதையெல்லாம் நல்ல பிள்ளையாய் தலையை ஆட்டியபடியே கேட்டுகொண்டிருந்த அம்பிகா கடைசியில், நான் வடிவேலு கூடத்தான் போவேன் எனக்கு சண்முகத்தை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவனோடு சேர்ந்து வாழமுடியாது என்று சொல்லியுள்ளார்.இதை கேட்டுக்கொண்டு பக்கத்தில் நின்று கொண்டிருந்த அம்பிகாவின் அண்ணன் வெள்ளியங்கிரி, நீ திருந்தவேமாண்டே... என்று சொல்லி விட்டு காவல் நிலையத்தை விட்டு வெளியே போனவர் கையில் ஒரு அருவாளை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே வந்து தனது தங்கை அம்பிகாவின் முடியை பிடித்து இழுத்து கிழே குனிய வைத்து வைத்து நடு முதுகில் ஓங்கி ஒரு போடு போட்டு விட்டார்.தனது கண் முன்னாலேயே அம்பிகாவுக்கு வெட்டு விழுந்ததை பார்த்து மிரண்டு போன ஆய்வாளர் குப்பு போட்ட சத்தத்தில் காவல் நிலையாத்துக்கு வெளியில் இருந்த சிலர் ஓடிவந்து வெள்ளியங்கிரியை பிடித்துக் கொண்டனர்.

முதுகில் வெட்டுப்பட்ட அம்பிகாவை முதலில், அவினாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆய்வாளர் குப்பு கொடுத்த புகாரின் பேரில், கைது செய்யப்பட்ட வெள்ளியங்கிரி இப்போது கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...