|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 March, 2012

இந்தியாவில் காணாமல்போன 1.17 லட்சம் குழந்தைகள் விளக்கம் அளிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!


 இந்தியா முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் காணாமல் போன 1.17 லட்சம் குழந்தைகளின் நிலைமை பற்றி உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு சாரா நிறுவனமான பச்பான் பச்சோ அந்தோலன் தாக்கல் செய்த பொதுநல மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்டாமஸ் கபீர் மற்றும் நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அரசு சாரா நிறுவனத்தின் சார்பில் மூத்த வழக்கறிஞர் புல்கா , புவான் ரிப்பு ஆகியோர் ஆஜராகி வாதாடினர். அரசின் புள்ளிவிவரங்களின்படியே 1.17 லட்சம் குழந்தைகள் கடந்த 2008 முதல் 2011 ஆம் ஆண்டு வரை காணாமல் போயுள்ளனர். இவர்கள் பிச்சை எடுத்தல், பாலியல் தொழில் ஆகியவற்றுக்காக கடத்தப்பட்டனரா? அல்லது குழந்தைத் தொழிலாளர்களாக்கப்பட்டுள்ளனரா என்ற விவரம் தெரியவில்லை என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஒரு நாளைக்கு 11 குழந்தைகள் காணமல்போவதாகவும் குழந்தைகள் காணாமல் போகும் சம்பவங்களில் பெரும்பாலும் காவல்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து காணாமல் போன 1.17 லட்சம் குழந்தைகளின் நிலைமை குறித்து உரிய விளக்கம் அளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...