|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 March, 2012

கடிபட்டு, சூடுபட்ட குழந்தை ஃபாலக் மாரடைப்பால் மரணம்.


டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 60 நாட்களாக உயிருக்குப் போராடிய 2 வயது பெண் குழந்தை ஃபாலக் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தது.கடந்த ஜனவரி மாதம் 18ம் தேதி 15 வயது பெண் ஒருவர் 2 வயது குழந்தை ஃபாலக்கை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தூக்கி வந்தார். அப்போது குழந்தை கோமாவில் இருந்தது. குழந்தையை யாரோ கடித்திருந்த தழும்புகளும், கன்னத்தில் இரும்பு கம்பியைக் காயவைத்து இழுத்த தழும்பும், அதனைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதால் ஏற்பட்ட காயங்களும் இருந்தது. அந்த குழந்தையின் எலும்பு உடைந்திருந்தது. அதற்கு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளதை மருத்துவர்கள் கண்டறிந்து அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அதன் மூளையில் ரத்தம் கட்டியிருந்தது. 

இதையடுத்து ஃபாலக்கை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். அந்த பிஞ்சுக் குழந்தைக்கு 6 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது. சில நாட்கள் உடல் நிலை மேம்படுவதும், சில நாட்கள் மோசமடைவதுமாக இருந்து வந்தது. இந்நிலையில் ஃபாலக்கிற்கு நேற்றிரவு 9 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. 9.40 மணிக்கு குழந்தை இறந்துவிட்டதாக மருததுவர்கள் அறிவித்தனர். ஃபாலக்கிற்கு ஏற்கனவே 2 முறை மாரடைப்பு ஏற்பட்டிருந்ததால் அதன் இதயம் மிகவும் வலுவிழந்து இருந்ததாக அதற்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் தீபக் அகர்வால் தெரிவித்தார். கடந்த 2 மாதமாக குழந்தையைக் காப்பாற்ற போராடியும் அது இறந்ததால் மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...