|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 April, 2012

சட்டபூர்வமான செக்ஸ் உறவுக்கு வயது வரம்பு 18


சட்டபூர்வ செக்ஸ் உறவுக்கு வயது வரம்பை 18 ஆக உயர்த்தும் புதிய சட்ட திருத்தத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. டெல்லியில் 26.04.2012 அன்று நடந்த மத்திய மந்திரிசபை கூட்டத்தில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டது.செக்ஸ் குற்றங்களில் இருந்து சிறு வயதினருக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டத்தின்படி 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட பெண்களிடம் அவர்களுடைய சம்மதத்தின் பேரில் செக்ஸ் உறவு வைத்திருந்தால் குற்றமாக கருதப்படுவது இல்லை.புதிய சட்ட திருத்தத்தின்படி, இந்த வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்படுகிறது. 18 வயதுக்கு குறைவானவர்களிடம் அவர்களுடைய விருப்பத்தின் பேரில் செக்ஸ் உறவு வைத்திருந்தாலும் இனி குற்றமாக கருதப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய சட்ட திருத்தம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொறுப்பு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் உண்டு என்ற திருத்தத்துக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது. பாராளுமன்ற நிலைக்குழுவின் சிபாரிசுகளின்படி இந்த திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
பெண்களுக்கு தங்கள் பணியிடங்களில் நடைபெறும் செக்ஸ் கொடுமை தடுப்பு சட்டத்துக்கான திருத்த விதிமுறைகளுக்கு மந்திரிசபை கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.ஒருதலைப்பட்சமான முடிவை எடுப்பதை தவிர்க்கும் வகையில் மேற்கொண்டு இந்த மசோதா குறித்து விவாதிக்க வேண்டியது இருப்பதால், ப.சிதம்பரம் தலைமையிலான மத்திய மந்திரிகள் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...