|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 April, 2012

திருப்பதி லட்டில் தங்கத் திருகாணி!

திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில் லட்டு பிரசாதத்தில், தங்க நகை இருந்ததைக் கண்ட பக்தர் ஒருவர் ஆச்சரியமடைந்தார்.திருமலை கோவிலில் தினமும், 2 லட்சம் முதல் 3 லட்சம் லட்டுகள் வரை தயாரித்து, பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. சித்தூர் மாவட்டம் பி.கொத்தகோட்டா டவுனில் ரங்கசமுத்திரம் சாலையில் வசிக்கும் சூரேரெட்டியப்பா, கடந்த இரு நாட்களுக்கு முன்பு திருமலைக்கு சென்றார். சாமி தரிசனத்திற்குப் பின், இவர் லட்டு பிரசாதங்களை வாங்கி வந்தார். இதில் ஒரு லட்டை, இதே டவுனில் சோகநாடி தெருவில் வசிக்கும் தனது நண்பரான சுபர்ணாச்சாரிக்கு வழங்கினார். இவர்கள் இந்த லட்டு பிரசாதத்தை திண்பதற்காக உடைத்துப் பார்த்தபோது, லட்டின் மையப் பகுதியில் வட்ட வடிவிலான, அரை கிராம் எடை கொண்ட தங்கத் திருகாணி இருப்பதைக் கண்டனர்.திருமலையிலிருந்து வாங்கி வந்த லட்டு பிரசாதத்தில் தங்கம் கிடைத்தது எங்களின் அதிர்ஷ்டம் என தம்பதியினர் தெரிவித்தனர்.கடந்த காலங்களில் பக்தர்கள் வாங்கிச் சென்ற லட்டு பிரசாதங்களில் இரும்பு ஆணிகள், கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு, பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதே லட்டு பிரசாதத்தில் இப்போது தங்கம் இருந்ததைக் கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...