|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 April, 2012

அலங்காரச் செடிகளால் வீட்டை அழகாக்கலாம்!

வீட்டிற்கு வெளியே காலி இடத்தில் தோட்டம் போடுவது வீட்டிற்கு அழகு தருவதோடு சுற்றுப்புற மாசுகளையும் நீக்கும். அதேபோல் வீட்டிற்குள் அழகான மலர்ச் செடிகள் கொண்டு அலங்கரிப்பது மனதிற்கு அமைதியை தரும். வரவேற்பரை மேஜைகளிலும், தொலைக்காட்சி வைக்கும் அலமாரி, டைனிங் டேபிள் போன்றவைகளில் அழகான செடிகளால் அலங்கரிக்கலாம். அதற்கான ஆலோசனைகளை அளிக்கின்றனர் உள் அலங்கார நிபுணர்கள்.

வரவேற்பரையில் செடிகள் வரவேற்பரையில் நன்கு வளர்ந்த அலங்கார இலைகள் கொண்ட செடிகளை வைத்து அழகுபடுத்தலாம். இவ்வாறு வைக்கப்படும் செடிகளின் எண்ணிக்கை அறையின் நீள அகலத்திற்கு ஏற்ப வைக்கவேண்டும். இவை அறையினுள்ளே இருப்பதால் இவற்றில் இலைகளின் தூசி படிய வாய்ப்புள்ளமையால் சிறு தெளிப்பான் கொண்டு 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தப்படுத்துவதன் மூலம் செடிகள் நன்கு இயற்கை எழில் மாறாமல் இருக்கும். இந்த செடிகளுக்கு சூரிய ஒளி கிடைக்க சிறிது நேரம் வீட்டுத்திண்ணையில் வைத்திட வேண்டும். நல்ல வெப்பநிலையில் சூரிய ஒளி படும்படி வைக்கக்கூடாது.

திண்ணை, போர்டிகோ வீடுகளில் வரவேற்பரை தவிர திண்ணை மற்றும் போர்டிகோ வீட்டு அறையின் நுழைவாயில் போன்ற இடங்களில் செடிகளை வைத்து நன்கு அழகுறச் செய்யயலாம். போர்டிகோ வீட்டு மற்றும் வீட்டு நுழைவாயில் போன்ற இடங்களில் நல்ல சூரிய ஒளி படும்படி இருப்பதால் நாம் வெளித்தோட்டத்தில் வைக்கும் செடிகளையே தொட்டிகளில் வளர்த்து அவற்றை அவை தாம் கொண்டுள்ள அழகு இலைத் தன்மை, பூத்தன்மை மற்றும் பல நிற வேறுபாடு கொண்ட இலைகள் ஆகியவற்றிற்கு தக்கபடி தொட்டியை முன்னும் பின்னும் மாற்றி அமைப்பதன் மூலம் நன்கு அழகுபடுத்தலாம்.

போர்டிகோ பகுதியில் தொங்கும் தொட்டிகள் பொருத்திக் கொள்ள ஏதுவாக இரும்பு வளையங்கள் பல வரிசையாக கட்டிடம் கட்டும்போதே பொருத்தி இருக்கும் இவற்றில் தொங்கும் தொட்டிளில் பல அழகுச் செடிகளை வைத்து தொங்கிவிடுவதன் மூலம் அழகுறச் செய்யலாம். போர்டிகோவில் பக்கவாட்டில் பூக்கும் அல்லது அழகு இலையுடன் கூடிய படர் கொடிகளை படரவிட்டு போர்டிகோவின் மேலிருந்து தொங்கும் வண்ணம் வளரவிட்டு அவற்றை வெட்டி விட்டு அழகுடன் மிளிரச் செய்யலாம்.இது தவிர வீட்டின் முன் வாயில் போர்டிகோவின் முன்பகுதி , போர்டிகோ பகுதி போன்ற இடங்கள் தொட்டிகளில் வளர்க்கப்பட்டு பெரிய, சிறிய செடிகளை தனித் தொட்டிச் செடியாகவோ அல்லது கூட்டாகவோ வைத்து நல்ல எடுப்பான தோற்றத்தை ஏற்படுத்தலாம்.

போர்டிகோ பகுதியில் வைக்கும் செடிகள் பொதுவாக இவ்வகைச் செடிகளுக்கு சூரிய ஒளி அதிகம் தேவைப்படாது. பனை மர வகைகள் பலவித இலை அமைப்பு கொண்டவைகளான பிட்சார்டிய, திரிநாஷ், குரோட்டன் வகைகள், எராந்திமம், கிராப்டோபியம், அக்ஸோநீமா, ஆஸ்பராக்ஸ், கலர் கீரை, கோலியஸ், டைபன்பேக்கியா, டிரசீனா, பைலியா, பெரலி வகைகள் மற்றும் ரப்பர் செடி வகைகள் போன்றவைகளைக் கொண்டு அழகு படுத்தலாம்.காசித்தும்பை, பெட்டூனியா, குள்ள மெரிகோல்ட், ஹெலிக் கோனியம் போன்ற பூச்செடிகளை வளர்க்கலாம்.

செடிகளை பராமரிக்க செடிகளின் வளர்ச்சி மிதமிஞ்சிவிட்டால் அவற்றை வெட்டி வளர்ச்சியை சீர்படுத்த வேண்டும். தொட்டியின் மேல் பகுதி மண் அரை அடி அளவுக்கு எடுத்து விட்டு 6 மாதத்திற்கு ஒரு முறை புது மண்ணைக் கொண்டு நிரப்ப வேண்டும்.தண்ணீர் தேவையை பொருத்து 2 நாட்களுக்கு ஒருமுறை அளித்திட வேண்டும்.செடிகளில் படியும் தூசு முதலியவற்றை வாரம் ஒரு முறை தண்ணீர் தெளிப்பான் கொண்டு தெளித்து சுத்தப்படுத்த வேண்டும். பூச்சி , பூஞ்சான நோய் தாக்குதல் இருந்தால் தக்க தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாம் வைக்கும் அறை போன்றவற்றில் சூரிய ஒளி படுவதற்கு வாய்ப்பே இல்லாமையால் அவற்றை 20 நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதம் ஒரு முறை சூரிய ஒளி படும்படி திண்ணை அல்லது போர்டிகோ போன்ற பகுதியில் வைக்க வேண்டும். இது தவிர இந்த இடங்களில் வைக்கும் செடிகளை இடத்தை மாற்றி வைப்பதன் மூலம் முகப்பு பாகம் மற்றும் போர்டிகோ பகுதியில் வைத்துள்ள செடிகளை 2 மாதத்திற்கு ஒரு முறை வீட்டிற்குள்ளே கொண்டு வருதல் போன்ற மாற்றத்தை கையாளலாம். இது போன்று பராமரிப்பின் மூலம் செடிகள் நல்ல நிலையில் நீண்ட நாள் வீட்டு அலங்கரிப்புக்கு பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...