|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 May, 2012

16 வயதுக்குக் குறைவான பெண்களின் படத்தை இனிமேல் பிரசுரிப்பதில்லை?


16 வயதுக்குட்பட்ட மாடல் அழகிகளை புகைப்படம் எடுக்க மாட்டோம், அந்தப் படங்களை பயன்படுத்த மாட்டோம் என்று வோக் பத்திரிக்கையின் 19 பதிப்பு ஆசிரியர்களும் உறுதியளித்துள்ளனர். மேலும் ஆரோக்கியமான உடல் நிலையுடன் கூடிய மாடல் அழகிகளை மட்டுமே புகைப்படத்திற்குப் பயன்படுத்துவோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.வோக் பத்திரிக்கையின் அட்டைப் படத்தில் இடம் பெறுவதை பலரும் பெருமையோடு சொல்லிக் கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட வோக் பத்திரிக்கை 2010ம் ஆண்டு பெரும் சர்ச்சையில் சிக்கியது. அந்த இதழில் 10 வயது சிறுமியின் படத்தை போட்டிருந்தனர். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பார்க்கவே பரிதாபமான உடலமைப்புடன் கூடிய அந்த சிறுமியின் படம் பெரும் கண்டனங்களையும் வாரிக் கொண்டு வந்தது.இதையடுத்து தற்போது வயது குறைவான, மெலிந்த உடல் அமைப்புடன் கூடிய மாடல்களை புகைப்படத்திற்குப் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை வோக் பத்திரிக்கையின் 19 நாடுகளின் ஆசிரியர்களும் ஒரு சேர முடிவு செய்துள்ளனர்.அமெரிக்கா பதிப்பு ஆசிரியர் அன்னா வின்டூர் தலைமையில் இந்த உறுதிமொழியை எடுத்துள்ளனர் இவர்கள். இதுகுறித்து வோக் பத்திரிக்கையின் அதிபர்களில் ஒருவரும், கான்டிநாஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்பின் தலைவருமான ஜோனதன் நியூஹவுஸ் கூறுகையில்,

நல்ல ஆரோக்கியமே அழகு என்பதை வோக் நம்புகிறது. எனவேதான் 16 வயதுக்குக் குறைவான பெண்களின் படத்தை இனிமேல் பிரசுரிப்பதில்லை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். மேலும் இனிமேல் ஆரோக்கியமான உடல் அமைப்பு கொண்ட பெண் அழகிகளின் படங்களை மட்டுமே பயன்படுத்துவோம். உலகம் முழுவதும் உள்ள வோக் பதிப்புகளின் ஆசிரியர்கள் இந்த உறுதிமொழியை பின்பற்றுவர் என்றார்.ஆசிரியர்கள் எடுத்துள்ள இந்த உறுதிமொழியானது வரும் ஜூன் மாதப் பதிப்பில் இடம் பெறுமாம். 16 வயதுக்கு குறைவான மாடல்களை பயன்படுத்த மாட்டோம், ஒல்லிக்குச்சி நோஞ்சானாக காட்சியளிக்கும் மாடல் அழகிகளையும் பயன்படுத்த மாட்டோம் என்பது உள்பட 6 உறுதிமொழிகளை ஆசிரியர்கள் எடுத்துள்ளனராம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...