|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

04 May, 2012

700 கோடிக்கு ஏலம் போன ஓவியம்!


நார்வே நாட்டைச் சேர்ந்த பிரபல ஓவியர் எட்வர்ட் மன்ஞ். இவர் 'தி ஸ்கிரீம்' (பயத்தில் அலறல்) என்ற தலைப்பில் 4 ஓவியங்கள் வரைந்து இருந்தார். அந்த ஓவியங்கள் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள 'கோத்பி' நிறுவனம் மூலம் ஏலம் விடப்பட்டது. அதில், ஒரு ஓவியம் ரூ.700 கோடிக்கு ஏலம் போனது.  இதன் மூலம் ஓவிய உலகில் பெரும் சாதனை படைத்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு ஸ்பெயின் ஓவியர் பேப்லோ பிக்காகோ வரைந்த ஓவியம் ரூ.5.35 கோடிக்கு ஏலம் போனது.அதுவே முந்தைய சாதனையாக கருதப்பட்டது. அதை மன்ஞ் வரைந்த இந்த ஓவியம் முறியடித்துள்ளது. சாதனை ஓவியத்தை வரைந்த ஓவியர் எட்வர்ட் மன்ஞ் தற்போது உயிருடன் இல்லை.கடந்த 1944-ம் ஆண்டு ஜனவரி மாதம் மரணம் அடைந்துவிட்டார். தற்போது, இவர் வரைந்த ஓவியத்தை நார்வே தொழில் அதிபர் பீட்டர் ஆல்சென் என்பவர் ஏலத்துக்கு கொண்டு வந்தார். இவர் ஓவியர் எட்வர்ட் மன்ஞ்சின் நண்பர் தாமசின் மகன் ஆவார்.  
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...