|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 May, 2012

இந்த வார பலன்18-5-2012 முதல் 24-5-2012 வரைமேஷம் பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். மனம் உற்சாகமாக இருக்கும். உடன் பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். கணவரை அனுசரித்துச் செல்வீர்கள். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லவும். யாரிடமும் உங்கள் ரகசியங்களைக் கூற வேண்டாம்.

ரிஷபம் பொது: சிறப்பான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். நட்பு வட்டாரம் விரிவடையும்.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். குழந்தைகள் உங்கள் சொல்படி நடப்பார்கள். சுப நிகழ்ச்சிகள் நடத்த முயற்சி மேற்கொள்வீர்கள். உறவினர்களிடம் மனம் திறந்து பேசாமல் இருப்பது நல்லது.வேலை பார்ப்போருக்கு: வேலையில் கூடுதல் கவனம் தேவை. உயர் அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பது நல்லது.

மிதுனம் பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. யாருக்கும் வாக்கு கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். பேச்சில் நிதானம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். இல்லத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். கணவரை அனுசரித்துச் செல்வது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. புதிய ஆபரணங்கள் வாங்கி மகிழக்கூடும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு எதிர்பாராத பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம்.

கடகம் பொது: உற்சாகமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் பேச்சால் மற்றவர்களை கவர்வீர்கள். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம். சமையல் அறையில் வேலை செய்யும்போது கவனமாக இருக்கவும். வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு எதிர்பார்த்த ஊதிய உயர்வு கிடைத்து மகிழ்வீர்கள். சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைக்கக்கூடும். சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

சிம்மம்பொது: அமைதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவு நன்றாக இருக்கும். திறமை மேம்படும். அறிவும், ஆற்றலும் பளிச்சிடும். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் சீராக நடக்கும். உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழக்கூடும். உறவினர்களிடம் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். உடல் நலனில் கவனம் தேவை.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்து உயர் அதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். மனம் உற்சாகமாக இருக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பண வரவு அதிகரிக்கும். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து விஷயத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும்.பெண்களுக்கு: குடும்பம் அமைதியாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள்.வேலைக்கு போகும் பெண்களின் கோரிக்கைகள் நிறைவேறும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வும், இடமாற்றமும் கிடைத்து மகிழக்கூடும். அலுவலகத்தில் குடும்ப விஷயங்களைப் பற்றி பேச வேண்டாம். அடுத்தவர்கள் சொந்த விஷயத்தில் தலையிடாமல் இருப்பது நல்லது. 

துலாம் பொது: மிதமான வாரம். எடுக்கும் காரியங்களில் சிலவற்றில் தான் வெற்றி கிடைக்கும். பண வரவுக்கு குறைவிருக்காது. வீண் செலவைக் குறைப்பது நல்லது. நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். கணவர் அன்பாக இருப்பார். எதிர்பாராத உதவிகள் பெறக்கூடும். வேலைக்கு போகும் பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் சுமூகமான சூழல் நிலவும். சிலருக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைத்து மகிழக்கூடும். வேலை பளு குறையும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது. 

விருச்சிகம் பொது: மகிழ்ச்சிகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். பயணங்களால் நன்மை உண்டு. உடல் நலனில் கவனம் தேவை. முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும்போது கவனமாக இருக்கவும்.பெண்களுக்கு: குடும்பம் குதூகலமாக நடக்கும். வசதி வாய்ப்புகள் பெருகும். சுப நிகழ்ச்சிகள் நடத்தி மகிழ்வீர்கள். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்களை அனுசரித்துச் செல்லவும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். சிலருக்கு விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைத்து மகிழக்கூடும். வீண் பேச்சைக் குறைத்துக் கொள்ளவும்.

தனுசு பொது: அனுகூலமான வாரம். எடுக்கும் காரியங்களை எப்பாடுபட்டாவது வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பண வரவு சீராக இருக்கும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்லவும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள்.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். குடும்பத்தார் ஒற்றுமையாக இருப்பார்கள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். இருப்பினும் அவர்களிடம் மனம் திறந்து பேச வேண்டாம்.வேலை பார்ப்போருக்கு: கொடுக்கும் வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சக ஊழியர்களின் குடும்ப விஷயங்களில் ஈடுபட வேண்டாம். உங்கள் ரகசியங்களை யாரிடமும் கூற வேண்டாம்.

மகரம் பொது: இன்பமான வாரம். எடுக்கும் காரியங்கள் எளிதில் முடியும். பண வரவு நன்றாக இருக்கும். வீடு மாற்ற இது உகந்த வாரம். நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். யாருக்கும் கடன் கொடுக்கவோ, ஜாமீன் கையெழுத்திடவோ வேண்டாம்.பெண்களுக்கு: குடும்பம் ஆனந்தமாக நடக்கும். கணவரிடம் பாராட்டு பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும். உற்றார், உறவினர்களை அனுசரித்துச் செல்லவும். குழந்தைகள் நலனில் கவனம் செல்லும்.வேலை பார்ப்போருக்கு: அலுவலகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொறுப்புள்ள பதவி கிடைக்கும். உங்கள் கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். 

கும்பம் பொது: முன்னேற்றகரமான வாரம். எடுக்கும் காரியங்கள் நல்லபடியாக முடியும். பொருளாதாரம் மேம்படும். பயணங்களால் நன்மை உண்டு. ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.பேச்சில் நிதானம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் மகிழ்ச்சிகரமாக நடக்கும். நீண்ட நாட்களாக வராத உறவினர் வந்து மகிழ்ச்சியடையக்கூடும். கணவர் அன்பாக இருப்பார். குழந்தைகள் சொல்படி நடப்பார்கள். உடல் நலனில் கவனம் தேவை.வேலை பார்ப்போருக்கு: சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து மகிழக்கூடும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் அதிகாரிகளும் உங்கள் நலனில் அக்கறை காட்டுவார்கள்.

மீனம் பொது: நிம்மதியான வாரம். எடுக்கும் காரியங்கள் திருப்திகரமாக முடியும். பண வரவுக்கு குறைவிருக்காது. சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். வழக்குகள் சாதகமாக முடியும். பெற்றோர் நலனில் கவனம் தேவை.பெண்களுக்கு: குடும்பம் நன்றாக நடக்கும். கணவரை அனுசரித்துச் செல்லவும். வேலைக்குப் போகும் பெண்கள் விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும். உறவினர்களுடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம்.வேலை பார்ப்போருக்கு: வேலை பளு குறையும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணி நிமித்த பயணங்களால் நன்மை உண்டு. சிலர் வருமானம் அதிகம் கிடைக்கும் வேலைக்கு செல்ல முயற்சிக்கலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...