|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 May, 2012

குரு பெயர்ச்சி...


குருபகவான் ஆண்டுதோறும், ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர்வது, குரு பெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு குரு பகவான் இன்று மாலை 6.18 மணிக்கு, மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். குரு பெயர்ச்சியையொட்டி, குரு கோவிலில் இன்று மாலை 6.18 மணிக்கு, குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெறும். அதேபோல் உற்சவருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கண்ணபிரான் செய்துள்ளார். கோவிந்தவாடி அகரம்காஞ்சிபுரம்- அரக்கோணம் சாலையில், கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் குரு கோவில் உள்ளது. இங்கு மவுன குருவாகிய தட்சிணாமூர்த்தியே, ஆதிகுருவாக விளங்குகிறார். பக்தர்கள் தட்சிணாமூர்த்தியை குரு பகவானாக வழிபடுகின்றனர்.இங்கு தட்சிணாமூர்த்தி ஜடாமுடியில் பிறை சந்திரனை தாங்கிக் கொண்டு, இடது மேல் கையில் அக்னி, வலது மேல் கையில் சர்ப்பம், இடது கீழ் கையில் மறைச்சுவடி, வலது கையில் சின்முத்திரை காட்டியபடி உள்ளார். யோக தட்சிணாமூர்த்திக்கு, தமிழகத்தில் இங்கு மட்டும் தனிக்கோவில் உள்ளது. 

நவக்கிரகங்களில் ஐந்தாவது இடத்தைப் பெறுவது குரு. நவக்கிரக சன்னிதிகளில், நவக்கிரகங்களுள் ஒருவராக குரு அமர்ந்திருப்பார். அவருக்கு, தேவகுரு, பிரகஸ்பதி, வியாழபகவான் எனப் பல பெயர்கள் உண்டு. பிரகஸ்பதி என்றால் அறிவில் சிறந்தவர் என்றும், குரு என்றால் இருளைப் போக்குபவர் என்றும் பொருள். ஜோதிடப்படி குரு பலம் இருந்தால்தான், எதிலும் வெற்றிபெற முடியும் என்பது நம்பிக்கை. திருமணம் நடைபெற குருபலம் தேவை. தென் மாநிலங்களில் குருவுக்கு தனிக் கோவில், காஞ்சிபுரத்தில் மட்டுமே உள்ளது. காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையத்தில், வேகவதி ஆற்றின் வடக்குக் கரையில், கமலாம்பிகை உடனுறை காயாரோகணே சுவரர் கோவில் உள்ளது. நவக்கிரகங்களில் ஒன்றான குருபகவானுக்கு, மூலவருக்கு எதிரே உட்பிரகாரத்தில் தனி சன்னிதி உள்ளது. குரு பகவான் இறைவனை வழிபடும் நிலையில், கைகளை நெஞ்சுக்கு நேர் கூப்பி வணங்கும் நிலையில் அமர்ந்தபடி காட்சி அளிக்கிறார். குருபகவான் தனி சன்னிதியில் எழுந்திருப்பதால், இக்கோவில் குரு கோவில் என்றே அழைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...