|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 May, 2012

இவன நிறுத்த சொல்லு!


கடந்த மே-1 ஆம் தேதி ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி படத்தின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டன.  ‘துப்பாக்கி’ திரைப்படத்தின் இந்த விளம்பர போஸ்டரில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி பெரிய அளவிலும், முதன்மையாகவும் இடம்பெற்றுள்ளது. பசுமை தாயகத்தின் மாநில செயளாலர் சௌமியா அன்புமணி இது போன்ற காட்சிகளை படத்திலிருந்து நீக்கி நீதிமன்றம் வகுத்துள்ள அரசாணைகளை பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மற்றொரு சமூக ஆர்வலரான வி.செல்வகுமார் நேற்று (04-05-12) சென்னை கமிஷனர் அலுவகத்தில் அளித்துள்ள புகாரில் ”துப்பாக்கி படத்தின் விளம்பரத்தில் இந்திய புகையிலை எதிர்ப்பு சட்டத்திற்கு எதிராக விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றிருப்பதால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், விளம்பரத்தில் நடித்த நடிகர், மேலும் விளம்பர போஸ்டரை உருவாக்க உதவியாக இருந்தவர்கள் ஆகியோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியும், அந்த போஸ்டர்களை பொது இடங்களில் இருந்து நீக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.துப்பாக்கி படத்தின் மீது மேலும் மேலும் வழக்குகள் போடப்படுவதால் டென்ஷனான துப்பாக்கி படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு இந்தி திரைப்படத்தின் விளம்பர போஸ்டரை டுவிட்டரில் போட்டு “இவன நிறுத்த சொல்லு நான் நிறுத்துறேன்” என்று டுவீட்டியிருக்கிறார். அந்த ஃபோட்டோவில் ஒருவர் மற்றொருவரை கொலை செய்வது போன்ற காட்சி இடம்பெற்றிருந்தது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...