|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 September, 2012

இந்த நிலைமை நம்மவுருக்கு வந்தா?


ஒரு குழந்தையின் அப்பாவை அறிமுகம் செய்வது அம்மா. ஆனால் அப்பா யார் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர்கள் மரபணு சோதனை செய்துக்கொள்ளுங்கள் என்ற அறிவிப்புடன் நியூயார்க் நகரை வலம் வந்து கொண்டிருக்கிறது ஒரு வாகனம்.இந்த வாகனத்தில் மரபணு சோதனை நடத்துவதற்கான அனைத்து பரிசோதனை வசதிகளும் உள்ளன. நிபுணர்கள் தயாராக உள்ளனர். மரபணு சோதனை நடத்துவதற்காக, ஒரு நபருக்கு 32 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. தினமும் நியூயார்க் நகரின் முக்கிய சாலைகளை சுற்றி வரும்போது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில் இந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. ஏராளமான ஆண்கள், தங்கள் குழந்தைகளை அழைத்து வந்து இந்த குழந்தை தங்களுக்குப் பிறந்ததுதானா? என்று பரிசோதனை செய்கின்றனர். அந்த ஆய்வு முடிவுகள் சில நாட்களுக்குப் பின்னர் அவர்களுக்கு இமெயில் மூலமாகவோ, கடிதம் மூலமாகவோ அவர்களுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது.
இதுபோன்ற சோதனை நடத்துவதற்கு அமெரிக்காவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதுபோன்ற சோதனைகள் மூலம் ஏராளமான தம்பதிகளிடையே தேவையற்ற மனக்கசப்பு ஏற்படுகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறியுள்ளனர். அமெரிக்காவில் ஏற்கனவே விவாகரத்துகள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் இதுபோன்ற சோதனைகளினால் குடும்ப வாழ்க்கையில் விரிசல்கள் அதிகம் ஏற்படும் என்றும் எச்சரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...