|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 October, 2012

பூமாலை தொடங்கி ஐபிஎல் டீம் வரை...

வீடியோ பத்திரிக்கை பூமாலை  மாறன் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் கலாநிதி மாறன், தயாநிதிமாறன் சகோதரர்கள் 18 வருடங்களுக்கு முன்பு பூமாலை வீடியோ பத்திரிக்கை ஆரம்பித்தனர். அதில் சினிமா செய்திகள், இயக்குநர் மற்றும் நடிகர் நடிகை பேட்டிகள் போன்றவைகளையும் திரைப்பட பூஜை போன்றவைகள் இடம்பெற்றன. இருந்தாலும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
சன் டிவி! தூர்தர்சன் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் மக்களின் நாடித்துடிப்பை உணர்ந்து தொடங்கப்பட்டது சன் டிவி. இந்த வேரிலிருந்து கிட்டத்தட்ட கேடிவி,சன்நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா என தமிழில் மட்டுமல்லாது, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் 30 சேனல்களை வரை தன் கைவசம் வைத்துள்ளது சன் குழுமம்.
பண்பலை வானொலி  சூரியன் எப்.எம் என்ற பண்பலை வானொலியை தொடங்கி பல்வேறு இந்திய மொழிகளில் ஒலிபரப்புகிறது.
பத்திரிக்கை துறையில் சன் குழுமம்  தினகரன் என்ற காலை நாளிதழும், தமிழ்முரசு என்ற மாலை நாளிதழும் சன் குழுமத்தின் வசம்.  குங்குமம் வார இதழ் சன் குழுமத்திடம் இருந்து வெளியாகும் வார இதழாகும்.
எஸ்.சி.வி, சன் டைரக்ட்  ‘எஸ்.சி.வி' எனப்படும் சுமங்கலி கேபிள் விசனை கையில் வைத்துள்ள சன் குழுமம் இல்லங்களில் நேரடியாக தனது நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப ‘சன் டைரக்ட்' என்ற டிடிஎச் செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவையை 2005ம் ஆண்டு முதல் தொடங்கியது.
திரைப்படத்துறையில் சன் குழுமம்  ஊடகத்துறையில் கோலோச்சிய சன் குழுமம் திரைப்படத்துறையில் சன் பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி பல திரைப்படங்களை விநியோகம் செய்தது முதன் முறையாக ரஜினிகாந்த் நடித்த எந்திரன் திரைப்படத்தை தயாரித்தது.
ஸ்பைஸ் ஜெட் விமானசேவை  ஊடகத்துறையில் மட்டுமே கோலோச்சிய சன் குழுமம் 2010ம் ஆண்டு ஸ்பைஸ் ஜெட் என்ற விமான நிறுவனத்தை வாங்கியது. அதுவரை உள்ளூரில் மட்டுமே இயக்கப்பட்டு வந்த ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் முதன் முறையாக டில்லியில் இருந்து காட்மண்டுவுக்கு இயக்கப்பட்டது.
விளையாட்டுத்துறையில்  பெரும்பாலான சேனல்களை கைவசம் வைத்திருக்கும் சன் குழுமம்  முதன் முறையாக ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய ஐ.பி.எல் அணி deccan chargers யை வாங்கியுள்ளது.

கலாநிதி மாறனின் நிர்வாகம்  32 சேனல்கள், 45 எப்.எம் ரேடியோ, நாளிதழ், வார இதழ் என ஊடகத்துறையில் அசைக்கமுடியாத சக்தியாக திகழ்வதற்கு சன்குழுமத்தின் நிறுவனர் கலாநிதிமாறன் நிர்வாகத்திறமையே சான்று என்கின்றனர் நீண்ட நாட்களாக சன் குழுமத்தை சேர்ந்தவர்கள். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...