|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 November, 2012

குழந்தை ரூ.100-க்கு விற்பனை!


நூறு ரூபாய்க்கு பச்சிளம் குழந்தையை விற்ற தாயையும், விற்கப்பட்ட குழந்தையுடன் பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்த பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.கோயம்பேடு மாநகர பேருந்து நிலைய வளாகத்தில், நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு, பச்சிளம் பெண் குழந்தையுடன், பெண் ஒருவர் திரிந்தார்.சந்தேகமடைந்த பேருந்து நிலைய போலீசார், அவரிடம் விசாரித்ததில், அவர் பெயர் முனியம்மாள், 24, மூலக்கடை, காமராஜர் சாலை பகுதியில் வசிப்பவர். குழந்தையுடன், கொடுங்கையூர் செல்ல உள்ளார் என, தெரியவந்தது.சந்தேகம் தீராத போலீசார், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் பல விவரங்கள் தெரியவந்தன.கடந்த மாதம், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், முனியம்மாளின் சகோதரி மகன் சிகிச்சை பெற்ற போது, மருத்துவமனைக்கு அவர் சென்றார். அப்போது, அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வி, 30 என்பவருக்கு, பெண் குழந்தை பிறந்தது. செல்வியுடன், முனியம்மாளுக்கு நட்பு ஏற்பட்டது.ஏற்கனவே, தனக்கு ஒரு பெண் இருப்பதால், பிறந்த பெண் குழந்தையையும் வளர்ப்பது கடினம் என, செல்வி கூறினார். தான் வளர்ப்பதாக கூறிய முனியம்மாளிடம், கடந்த 12ம் தேதி, 100 ரூபாய்க்கு குழந்தையை விற்றார்.அந்த குழந்தையுடன் தான், முனியம்மாள் பேருந்து நிலைய வளாகத்தில் சுற்றி திரிந்தார். தனது முதல் கணவர் இறந்த நிலையில், இரண்டாவது கணவரும் கைவிட்டதால் தான் குழந்தையை விற்றதாக, விசாரணையில் செல்வி இதையடுத்து இருவரையும், கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...