|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 November, 2012

ஏழைகளே அடிமையாகி...


இந்தியாவில், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு, பணக்காரர்களை விட ஏழைகளே அதிக எண்ணிக்கையில் அடிமையாகி வருவதாக, உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.நாட்டில் மொத்தம், 46.7 சதவீதம் பேர், புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். இதில், 21.8 சதவீதம் பேர் பணக்காரர்கள்; 24.9 சதவீதம் பேர் ஏழைகள். புகைபிடிப்பவர்களின் சமூகம் - பொருளாதாரம் இடையேயுள்ள பிரச்னையை (இன் ஈகுவாலிட்டி), மையமாக கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இத்தகவல் தெரிய வந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில், 25 சதவீதம் பேர், அதிக அளவில் புகைபிடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர்.மத்திய சுகாதார குடும்ப நல அமைச்சகத்தின் உதவியுடன், உலக சுகாதார அமைப்பு நடத்திய, "குளோபல் அடல்ட் டொபேக்கோ சர்வே 2009-10' ஆய்வறிக்கையில், "புகைபிடிக்கும் பழக்கம் கொண்டவர், குறைந்தபட்சம் மாதம், 300 ரூபாயும், பீடிக்காக 93 ரூபாயும் செலவழிக்கின்றனர். பணக்கார பெண்களை விட, ஏழை பெண்கள் நான்கு மடங்கு அதிகமாக புகைபிடிக்கும் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.மண்டல புற்றுநோய் மைய (ஆர்.சி.சி) ஆன்காலஜித் துறை மருத்துவர் ஜெயகிருஷ்ணன் சர்வதேச அளவில், ஐரோப்பிய நாடான ஹங்கேரியில், 82.6 சதவீத ஏழை மக்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர். மிகவும் குறைந்த பட்சமாக, ஆப்ரிக்க நாடான எத்தியோபியாவில், 5.3 சதவீத ஏழைகள் புகைபிடிக்கும் அடிமையாகி உள்ளனர். ஹங்கேரியில், 65.6 சதவீத பெண்கள் இப்பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளனர்; சர்வதேச அளவில் முதலிடத்தில் உள்ளனர். புகைபிடிக்கும் பழக்கத்தால், புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுபவர்களில், ஏழை மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...