|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 December, 2012

குறுந்தகவல் சேவை துவங்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் !

எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுந்தகவல் சேவை துவங்கப்பட்டு இன்றுடன் 20 ஆண்டுகள் நிறைவடைகிறது.கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதி இங்கிலாந்தைச் சேர்ந்த என்ஜினியர் நீல் பாப்வொர்த்(22) என்பவர் தனது ஆர்பிடெல் 901 செல்போனில் இருந்து வோடபோன் நெட்வொர்க் மூலம் மெர்ரி கிறிஸ்துமஸ் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார். அது தான் உலகில் முதன்முதலாக அனுப்பப்பட்ட எஸ்.எம்.எஸ். ஆகும்.ஆனால் வியாபார ரீதியாக எஸ்.எம்.எஸ். சேவை 1993ம் ஆண்டு ஸ்வீடனில் துவங்கியது. அதன் பிறகு அதே ஆண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் எஸ்.எம்.எஸ். சேவை துவங்கியது. தொடர்ந்து 1994ம் ஆண்டு எஸ்.எம்.எஸ். சேவையுடன் கூடிய நோக்கியா 2110 போனை நோக்கியா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.தற்போது ஒவ்வொரு நொடிக்கும் 2 லட்சத்திற்கும் அதிகமான எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...