|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 December, 2012

90% இந்தியர்கள் இடியட்ஸ்களாக...


இந்தியாவில் 90% இந்தியர்கள் இடியட்ஸ்களாக மதத்தின் பெயரால் சொல்லப்படுபவற்றை அப்படியே நம்புகிறவர்களாக இருக்கின்றனர் என்று இந்தியன் பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க்கண்டேய கட்ஜூ தெரிவித்திருக்கிறார். டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசிய கட்ஜூ, 90% இந்தியர்கள் முட்டாள்கள்தான். அவர்களது மூலை அவர்களின் தலையில் இருப்பதே கிடையாது. அதனால்தான் உங்களை வேறு ஒருவரால் எளிதாக கையாள முடிகிறது. ரூ2 ஆயிரத்துக்காக டெல்லியில் இனமோதலில் ஈடுபட்டவர்களும் இருக்கின்றனர். வழிபாட்டின் பெயரால் நீங்கள் ஏமாற்ரப்படுகிறீர்கள். நாட்டில் 1857-க்கு முன்பு இப்படியான மத மோதல்கள் இருந்தது இல்லை. ஆனால் தற்போது 80% இந்துக்களும் 80% இஸ்லாமியர்களும் மதவாதிகளாக இருக்கின்றனர். இது கசப்பான உண்மைதான். இதேபோல் இந்தி மொழி என்பது இந்துக்களுடையது. உருது மொழி என்பது முஸ்லிம்களுடையது என்ற கருத்தும். நமது முன்னோர்களும் உருது மொழி படித்தோர்தான்.. ஆனால் உங்களை எளிதாக முட்டாளாக்குகின்றனர் என்றார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...