|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 December, 2012

உலக மனிதஉரிமைகள் தினம்!

ஓவ்வொருவரும் தான் வாழ்வதுடன் பிறரையும் வாழவிடவேண்டும் என்பதனை வலியுறுத்தும்விதமாக ஓவ்வொரு ஆண்டும் டிச.10-ம் தேதி உலக மனித உரிமைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 1948-ம் ஆண்டுடிசம்பர் 10-ம் தேதி ஐ.நா. பொதுச்சபையில், உலக மனித உரிமைகள்தினம் பிரகடனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை பெருமைபடுத்துவித்தில் 1950-ல் இத்தினம் தொடங்கப்பட்டது.உலகில்வாழும் அனைவரும் சமம். ஓருவரிடம் நாம் என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை நாமும் மற்றவர்களுக்கு வழங்க வேண்டும். யாரையும் அடிமைப்படுத்தக்கூடாது.

எதுமனித உரிமை ஒருவர் பிறக்கும் போதே அவருக்கான மனித உரிமை வந்துவிடுகின்றன. உயிர்வாழ்வதற்கானஉரிமை, கருத்துசுதந்திரம், கல்வி,மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை அம்சங்கள் மற்றும் வாழ்வதற்கு அவசியமான உரிமைகள் அனைத்தையும் மனித உரிமைகள் எனலாம்.தொடரும் மீறல்கள் இந்தியாவில் தேசிய மனித உரிமை ஆணையம் 1991-ம் ஆண்டு அக்.13-ல்இந்திய மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. உலக நாடுகளிலும்,இந்தியாவிலும் அடிமைத்தனம், இனவெறி,பாலியல் குற்றங்கள் என மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.இதைமுற்றிலும் தடுப்பதற்கு அரசுடன் இணைந்து மக்களும் முயற்சி மேற்கொள்ள வேண்டும். மனித உரிமைகளுக்காக பாடுபட்டவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐ.நா. சபை விருது வழங்கி கவுரவிக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...