|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2013

64-வது குடியரசு தினம்!

உலகின் பெரிய ஜனநாயக நாடுஇந்தியா, என்பதில் பெருமை கொள்கிறோம். 121 கோடி மக்கள் தொகையை கொண்ட நம் நாட்டில் மொழி, மதம், இனம் என வேறுபாடுகள் இருந்த போதும், ஜனநாயகப் பாதையில் தொடர்ந்து பயணிப்பது தான் சிறப்பம்சம்.விஞ்ஞானம், அறிவியல், விளையாட்டு, கல்வி, சினிமா என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக, இந்தியா முன்னேறிவருகிறது. கடந்த 15 ஆண்டுகளில்தனிமனித வருமானம் அதிகரித்துள்ளது.வடக்கில் பனிபடர்ந்த இமயமலை,தெற்கில் பசுமையான கேரளா,மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் வடகிழக்கு மாநிலங்கள், பாலைவனம் உள்ள ராஜஸ்தான் என புவியியல் அமைப்பிலும் பல வித்தியாசங்கள். சரியும் ஜனநாயகம்இவ்வளவு சிறப்புமிக்க இந்தியஜனநாயகம், இன்றைய நவீன காலத்தில் பல்வேறு பிரச்னைகளில் சிக்கிதவிக்கிறது. ஜனநாயகத்தின் தலைமை இடமான பார்லிமென்ட், பயனில்லாத இடமாக மாறிக்கொண்டிருக்கிறது. காந்தி, நேரு, வல்லபாய் படேல், நேதாஜி என ஆரம்பகால தலைவர்களின் சிறப்பான பணியை தொடர முடியாமல், தற்போதைய அரசியல்வாதிகள் தடுமாறுகின்றனர். 

இதனால் ஜனநாயகத்தின் மீதுமக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். தற்போதைய எம்.பி.,க்களில் மூன்றில் ஒரு பகுதியினர், கிரிமினல் பின்னணி உடையவர்கள். எந்த கூட்டத் தொடருமே, முழுமையான நாட்களை நிறைவு செய்வதில்லை. ஒவ்வொரு திட்டத்திலும் கோடிக்கணக்கில் ஊழல் நடக்கிறது.ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் மாறி மாறி அவர்கள் செய்த ஊழல்களை பற்றி பேசவே நேரம் கிடைக்கவில்லை. பின், மக்களைப்பற்றி சிந்திக்க எப்படி நேரம் வரும். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள, இந்தியர்களின் கறுப்பு பணத்தை பற்றிய விவரம் இன்றளவும் வெளியிடப்படவில்லை. வெளிநாட்டு, உள்நாட்டு பயங்கரவாதம், நவீன இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.நாட்டின் உயரிய விசாரணை அமைப்பான சி.பி.ஐ., ஆளும் கட்சியின், கைப்பாவையாக செயல்படுவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு ஆட்சியில் போடப்படும் வழக்குகள், அடுத்த ஆட்சியில், அதன் சுவடே இல்லாமல் தள்ளுபடி செய்யப்படுகிறது. இது,குற்றங்கள் அதிகரிக்கத்தான் வழி செய்யும். வாரிசு அரசியல், அசுர வளர்ச்சி பெறுகிறது. அதே நேரம், அரசியலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் கானல் நீராக உள்ளது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், ஆண்டுதோறும் அதிகரிக்கிறதே தவிர குறையவில்லை. மக்கள் தொகையில் 40 சதவீதம் பேர், ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கும் கீழ் வருமானம் பெறுபவர்கள். நாளுக்குநாள் உயரும் விலைவாசியால், இவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர். இதற்கு ஒரே தீர்வு, பெரும்பான்மை மக்களுக்கு பயன்பெறக் கூடிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குஅரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். மறுபக்கம், ஜனநாயகத்தை பாதுகாக்க, மக்களும் ஒத்துழைக்கவேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...