|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2013

பாரத விலாஸ்!சிவன், அம்பிகை, விஷ்ணு, விநாயகர், சூரியன் ஆகிய ஐந்து தெய்வங்களையும் வழிபடும் முறைக்கு பஞ்சாயதனம் என்று பெயர். இந்த ஐந்தில் எது இஷ்ட தெய்வமோ அதை நடுவில் வைத்து, மற்ற தெய்வங்களைச் சுற்றிலும் வைத்து வழிபட வேண்டும். விக்ரகமாக வைக்காமல், இயற்கையாகக் கிடைக்கும் கற்களையே இதற்குப் பயன்படுத்துவர். நர்மதா நதியில் கிடைக்கும் கல்லை சிவலிங்கமாகவும், ஆந்திராவிலுள்ள சுவர்ணமுகி ஆற்றங்கரையில் கிடைக்கும் சுவர்ணரேகசிலா என்னும் பொன் நிறக் கற்களை அம்பிகையின் அம்சமாகவும், பீகாரில் ஓடும் சோணபத்ரா நதியில் கிடைக்கும் சிவப்புக்கற்களை விநாயகராகவும், நேபாளம் கண்டகி நதியிலுள்ள கிடைக்கும் சாளக்கிராமக் கற்களை விஷ்ணுவாகவும், தஞ்சை மாவட்டத்தில் வல்லத்தில் கிடைக்கும் ஸ்படிக கற்களை சூரியனாகவும் வைத்துக் கொள்வர். இதனோடு, முருகனை வழிபட விரும்புபவர்கள் வேல் ஒன்றையும் சேர்த்துக் கொள்ளலாம். நாட்டின் ஒருமைப்பாட்டை உணர்த்தும் பஞ்சாயதன பூஜை முறை பின்பற்றும் வீட்டை பாரத விலாஸ் என்றே பாராட்டி மகிழலாம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...