|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 January, 2013

கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் - அஜித்!

அஜித்குமார், மத்திய அரசின் சேவை வரி மீதான தனது கருத்தை தெரிவித்துள்ளார். இணையதளம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் அஜித் “ ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் திருந்தினால் தான் இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும். அவர்களாக முன்வந்து தங்களிடமிருக்கும் ஊழல் செய்த கருப்பு பணத்தை தங்கள் பையிலிருந்து எடுத்து கொடுத்தால் தான் இந்தியா வளரும். தேவையில்லாமல் எதற்கும் வரி போட வேண்டிய அவசியமும் இருக்காது.    இது மட்டும் நடந்துவிட்டால் உலகின் பணக்கார முதல் பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இருக்கும். இவர்களிடமிருந்து இந்த நாட்டை ‘கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்’. இதே நிலை தொடர்ந்தால் வின்ஸ்டன் சர்ச்சில் கூறியது போல எதிர்காலத்தில் நீருக்கும், காற்றிற்கும் கூட வரி விதிக்க வேண்டிய கட்டாயம் வரலாம்” என்று கூறினாராம். நீருக்கு ஏற்கனவே வரி வசூலிக்கப்பட்டு வருவதால், அடுத்தது காற்று தான்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...