|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 January, 2013

தலைவா விஜய்!

விஜய் நடிக்கும் புதிய படம் தலைவா

2012ல் துப்பாக்கி திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த விஜய். அடுத்ததாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது.இதனிடையே படத்துக்கு "தலைவா' எனப் பெயரிட்டுள்ளனர். ஆரம்பத்தில் தங்கமகன், தளபதி, தலைவன், இளைய தளபதி ஆகிய பெயர்களில் ஏதாவது ஒன்றை சூட்டலாமா என  படக்குழு பரிசீலித்து வந்தது. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே, நீண்ட ஆலோசனைக்குப் பிறகு "தலைவா' என்ற பெயரை தேர்வு செய்துள்ளனர். இதற்கான டிசைனும் வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...