|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 January, 2013

விரலைப் பிடித்துக் கொண்டு வெளியே ...

மெரிக்கா: தனது மனைவியின் பிரசவத்தின்போது எடுக்ப்பட்ட படம் ஒன்றை அவரது கணவர் வெளியிட்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அவரது மகள் பிறந்தபோது, பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை இறுகப் பற்றியபடி வெளியே வந்ததே இந்த ஆச்சரியத்திற்குக் காரணம். இந்தப் புகைப்படம் இப்போது இன்டர்நெட்டில் படு வேகமாகப் பரவி வருகிறதாம். அமெரிக்காவின் அரிசோனா, கிளான்டெல் பகுதியைச் சேர்ந்தவர் அலிசியா அட்கின்ஸ். இவருக்கு கடந்த அக்டோபர் மாதம் 9ம் தேதி பிரசவம் நடந்தது. அழகிய மகளைப் பெற்றெடுத்தார். அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தையை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். நெவியா என்று குழந்தைக்குப் பெயரிட்டனர். பிரசவத்தின்போது அலிசியாவின் கணவர் ராண்டியும் உடன் இருந்தார் - கையில் கேமராவுடன்.மனைவிக்குப் பிரசவம் நடப்பதை அவர் வீடியோவில் பதிவு செய்து கொண்டார். அப்போது திடீரென ஒரு டாக்டர், ராண்டியைப் பார்த்து, உங்களது மகள் எனது விரலைப் பிடிக்கிறாள் பாருங்கள் என்று கூற திரும்பிப் பார்த்தார் ராண்டி. என்ன ஆச்சரியம், அம்மாவிடமிருந்து வெளியே வர ஆரம்பித்துக் கொண்டிருந்த ராண்டியின் மகள், பிரசவம் பார்த்த டாக்டரின் விரலை படு அழகாக, இறுக்கமாக பிடித்தபடி வெளியே வந்து கொண்டிருந்தாள். இந்த் காட்சியைக் கண்டு வியந்து போன ராண்டி உடனே அதை படமாக எடுத்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...