|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 January, 2013

அப்பாடி உருப்படியான தீர்ப்பு!


நாடு முழுவதும் பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கக் கூடாது என அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச முதலமைச்சராக மாயாவதி பதவிவகித்தபோது, நொய்டா பார்க்கில் தனது சிலைகளை நிறுவினார். மேலும் கட்சியின் சின்னமான யானையின் சிலைகளையும் மாயாவதி அமைத்தார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று ஆர்.எம். லோதா, எஸ்.ஜெ. முகோபாத்யா அடங்கிய பெஞ்ச், முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொது இடங்களில் சிலைகளை அமைக்க அனுமதிக்க வேண்டாம் என மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேசமயம் இந்த உத்தரவு சாலைகளில் வைக்கப்படும் டிராபிக் சிக்னல்கள், தெரு விளக்குகளுக்கு பொருந்தாது என்றும் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம் இனி உள்ள அரசியல்வாதிகளின் சிலைகளை பொது இடங்கள், சாலை ஓரங்களில் நிறுவ முடியாது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...