|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 January, 2013

தமிழ் எழுத படிக்கத்தெரியாத தமிழ்நாட்டு MLA?

ஓசூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுக்கு, தமிழிலில் எழுதப் படிக்கத் தெரியாததால், தொகுதி வளர்ச்சிப் பணி பிரச்னைகளை, நிறைவேற்ற முடியாமல் திண்டாடி வருகிறார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சட்டசபை தொகுதி, காங்., - எம்.எல்.ஏ., கோபிநாத். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்று, ஹாட்ரிக் சாதனை படைத்து, தற்போது தமிழக சட்டசபையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் குழுத் தலைவராக உயர்ந்துள்ளார். கோபிநாத்.ஆனால் அவருக்கு, தமிழில் எழுதப் படிக்கத் தெரியாது. தெலுங்கு மொழியில் படித்த அவருக்கு, சுத்தமாக தமிழில் எழுதத் தெரியாது. தட்டுத் தடுமாறி மிகவும் சிரமப்பட்டு எழுத்து கூட்டி மட்டுமே படிக்கிறார். தமிழ் மொழியை கற்றுக் கொள்ளவும் அவர் ஆர்வப்படவில்லை. அனைத்து அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பேசும் போது அவர், "எனக்கு தமிழ் சரியா வராது; அதனால் மன்னிக்கவும்' என, கூறி முழுமையாக தெலுங்கில் மட்டுமே பேசுவார்.
இம் இப்படியும் ஒரு MLA தேர்ந்த்தெடுத்த மக்களை சொல்லனும். நாம என்ன பண்ண முடியும் 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...