|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 February, 2013

அசின் நடிக்க எதிர்ப்பு!இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் நடிகர், நடிகைகள் யாரும் அந்நாட்டுக்கு செல்லக்கூடாது என திரையுலக கூட்டமைப்பு தடை விதித்தது. 
இதையடுத்து தமிழ் படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெறவில்லை. நடிகர், நடிகைகளும் இலங்கை பயணத்தை ரத்து செய்து விட்டனர். சினிமா பின்னணி பாடகர்கள் பலர் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்க இலங்கைக்கு அழைக்கப்பட்டு இருந்தார்கள். தமிழ் அமைப்புகள் எதிர்ப்பால் அவர்களும் இசை கச்சேரியை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பினர். 

ஆனால் அசின் மட்டும் எதிர்ப்பை மீறி இலங்கையில் நடந்த ரெடி இந்தி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்றார். இதற்கு நடிகர் சங்க செயற்குழுவில் பேசிய சத்யராஜ் உள்ளிட்ட நடிகர்கள் கண்டனம் தெரிவித்தனர். தமிழ் படங்களில் அசினை நடிக்க வைக்ககூடாது என்றும் எதிர்ப்பு கிளம்பியது.  
இதனால் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழ் படங்களில் நடிக்கவில்லை. தற்போது கே.வி.ஆனந்த் இயக்கும் புதுப்படத்தில் விஜய் ஜோடியாக அசின் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு இந்து மக்கள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
அக்கட்சியின் சென்னை மண்டல செயலாளர் எஸ்.எஸ். சிவா வெளியிட்ட அறிக்கையில் தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு திரையுலகினரின் எதிர்ப்பை மீறி அசின் சென்று வந்தார். பிரபாகரனின் மகனான சிறுவன் பாலச்சந்திரனை குரூரமாக கொன்றதன் மூலம் இலங்கையின் குரூர முகம் உலகுக்கு தெரிய வந்துள்ளது. இதனால் தமிழர்கள் மனம் புண்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அசினை கே.வி. ஆனந்த் தனது படத்தில் நடிக்க வைப்பது தமிழர்களை மேலும் புண்படுத்துவதாக இருக்கும். எனவே அசினை நடிக்க வைக்க கூடாது என்று கூறியுள்ளார்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...