|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 February, 2013

வைகோ - ஜெயலலிதா திடீர் சந்திப்பு!


மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை முதலமைச்சர் ஜெயலலிதா சிறுதாவூர் அருகே சந்தித்துப் பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.மதுவிலக்கை வலியுறுத்தி வைகோ, தமது கட்சியுடனருடன் நடைபயணமாக வந்துகொண்டிருந்த நிலையில், தமது சிறுதாவூர் பங்களாவுக்கு செல்லும் வழியில் பையனூர் அருகே வைகோவை பார்த்த ஜெயலலிதா, தமது காரை திருப்பச் சொல்லி, வைகோ அருகில் சென்றார்.பின்னர்காரிலிருந்து இறங்கிச் சென்று வைகோவிடம் நலம் விசாரித்தார் குறிப்பாக உங்களது தாயார் எப்படி இருக்கிறார் ? என ஜெயலலிதா கேட்க, நலமுடன் இருப்பதாக பதிலளித்தார் வைகோ.

தொடர்ந்து அவரது நடைபயணம் வெற்றி பெற தமது வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்தார். வைகோவும் பதிலுக்கு ஜெயலலிதாவிடம் நலம் விசாரித்தார். இருவரும் சுமார் 7 நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்ததனர்.  கடந்த சட்டசபை தேர்தலின்போது அதிமுக- மதிமுக இடையேயான கூட்டணி முறிந்த பின்னர் இருவரும் சந்திப்பது இதுவே முதல்முறையாகும் .வைகோவை கழ்ற்றிவிட்ட பின்னர்  தேமுதிகவை கூட்டணியில் சேர்ந்துகொண்டார் ஜெயலலிதா. தற்போது தேமுதிகவுடன் கூட்டணி முறிந்துவிட்ட நிலையில், வைகோவை சந்தித்து ஜெயலலிதா பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளதோடு, பல்வேறு அரசியல் யூகங்களையும் கிளப்பியுள்ளது.

இது ஒரு ய்தேச்சையான சந்திப்பு என்றாலும், ஜெயலலிதா நினைத்திருந்தால் அப்படியே சிறுதாவூர் சென்றிருக்கலாம். ஆனால் காரை யூ டர்ன் அடிக்கவைத்து, வைகோ அருகில் சென்று சந்தித்துப் பேசியுள்ளார். வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்fதலில் அதிமுக தனித்தே போட்டியிடும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளபோதிலும், அப்போதையை சூழலுக்கு ஏற்ப தனது முடிவை அவர் மாற்றிக்கொள்ளவும் கூடும். அரசியலில் சமய சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப நீக்குப்போக்காக செயல்பட்டால்தான் தாக்குப்பிடிக்க முடியும் என்ப்து ஜெயலலிதா அறியாதது அல்ல.. மேலும் வைகோ அளவுக்கு விஜயகாந்துக்கு அரசியல் முதிர்ச்சியும், அனுபவமும் கிடையாது என்பதையும் அவர் தற்போது உணர்ந்திருப்பார்.அந்த எண்ணத்துடனேயே அவர் சில எதிர்கால காய்நகர்த்தல்களை கணக்குபோட்டு, வைகோவை சந்தித்திருக்கக்கூடும் என்று கூறுகிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

இதனிடையே நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட சில முக்கிய நிர்வாகிகள் கட்சியைவிட்டு விலகிய நிலையில், சோர்வடைந்து காணப்பட்ட மதிமுகவினரிடையே இந்த் சந்திப்பு உற்சாகத்தை கொடுத்துள்ளது.  ஜெயலலிதா, வைகோவை சந்தித்துப் பேசிவிட்டு சென்றபின்னர் நடை பயணத்தில் சென்ற மதிமுகவினரிடம் காண்ப்பட்ட உற்சாக நடையில் அது வெளிப்பட்டது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், இது தொடர்பாக வைகோவுடன் சென்றவர்களை தொடர்பு கொண்டு, இச்சந்திப்பு குறித்து ஆர்வமுடன் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது.
அவர்களது இந்த உற்சாகத்திற்கு,  இச்சந்திப்பு  மீண்டும் கூட்டணி ஏற்பட,  அச்சாரமாக இருக்கும் என்ற எண்ணம்தான் காரணமாக இருக்க முடியும்.அதே சமயம் வைகோ மனதில் என்ன உள்ளது என்பதை அறிந்துகொள்ளவும் கட்சியினர் ஆர்வம் காட்டுகின்றனர். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...