|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 February, 2013

பிரபாகரன் மகன் படுகொலை???நா கூசாமல் பொய் சொல்லும் இலங்கை..விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், இலங்கை ராணுவத்தினரால் கொடூரமாக கொல்லப்பட்டது தொடர்பான புகைப்படங்களை, சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், மணல் மூடைகளுக்கு நடுவே, சட்டை கூட அணியாமல் லுங்கியை போர்த்திக் கொண்டு காயங்களுடன் பரிதாபமாக, 12 வயதான பாலச்சந்திரன் அமர்ந்திருக்கும் படம் வெளியிடப்பட்டுள்ளது. பாலச்சந்திரனுக்கு பாதுகாப்பாக நின்றிருந்த விடுதலைப் புலிகள் ஐந்து பேர், கைகள் கட்டப்பட்டு, தலையில் சுடப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டிருக்கின்றனர்.

மற்றொரு படத்தில், பாலச்சந்திரன் பிஸ்கட் போன்ற எதையோ சாப்பிடுகிறார். அதே கேமராவில் தான், பாலச்சந்திரன் சுடப்பட்டு வீழ்ந்து கிடக்கும் காட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. நிர்கதியாக நின்ற பாலச்சந்திரனின் நெஞ்சில் ஐந்து துப்பாக்கி குண்டுகள் துளைத்துள்ளன. இதன் மூலம், ராணுவத்தின் பிடியில் இருந்த போது தான் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாக கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சேனல் 4 செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆய்வாளர்களின் கூற்றுப்படி அவர் 2அடி தூரத்தில் இருந்தே சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பார் என்று அறியமுடிகிறது. அவரின் பாதுகாவலர்களை அவரின் கண்முன்னாலே சுட்டு விட்டு அவரையும் சுட்டிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது.இந்த படங்கள் வெளியானது பிரபாகரன் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுட்த்தி உள்ளது.  இலங்கை ராணுவத்தின் மேலும் பல கொடூரச் செயல்கள் அடங்கிய காட்சிகளை விரைவில் ஆவணப்படமாகவும் சானல் 4 தொலைக்காட்சி வெளியிட உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...