|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 February, 2013

காதலனுடன் தனியாக ஓர் இரவு?

முற்றிலும் பெண்களே பங்கேற்கும் ஏ.கே.பி.48 என்ற பாப் இசைக்குழு கடந்த 2005ம் ஆண்டு ஜப்பானில் துவங்கப்பட்டது. 16 முதல் 20 வயதுக்குட்பட்ட சுமார் 90 பெண்கள் இந்த இசைக்குழுவில் பாடகிகளாக உள்ளனர். ஜப்பானையும் தாண்டி ஆசியா கண்டம் முழுவதும் ஏ.கே.பி.48 பாப் இசைக்குழு பிரபலமடைந்துள்ளது. இந்த இசைக்குழுவில் இடம் பெற்றுள்ள பாடகிகளுக்கு நிர்வாகத்தின் சார்பில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதில், ஆண் நண்பர்களுடன் நெருக்கமாக பழகக்கூடாது என்பது முக்கிய கட்டுப்பாடு ஆகும். இந்த கட்டுப்பாட்டை மீறி, வேறொரு இசைக்குழுவில் பணியாற்றும் அலன் ஷிராஹாமா என்ற வாலிபரின் வீட்டிலிருந்து ஏ.கே.பி.48 பாடகி மினாமி மினேகிஷி வெளியே வரும் புகைப்படத்துடன் கூடிய செய்தி நேற்று ஜப்பான் பத்திரிகைகளில் வெளியாகின. இந்த செய்தி வெளியான சில மணி நேரத்திற்குள் தனது தலைமுடியை மொட்டை அடித்துக்கொண்ட மினாமி மினேகிஷி வீடியோ மூலம் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார்.

'இப்படி மன்னிப்பு கேட்பதால் மட்டும் எனது தவறு நியாயமாகிவிடும் என நான் கருதவில்லை. இந்த இசைக்குழுவில் இருந்து வெளியேற்றப்பபடுவதை நான் விரும்பவில்லை. நான் செய்த தவறுக்காக வருத்தப்படுகிறேன். எனது ரசிகர்களும், இசைக்குழுவின் நிர்வாகிகளும் என் தவறை மன்னித்து என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்' என கண்ணீர் பொங்க அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். 
 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...