|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 March, 2013

'இங்கு எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள்?


இலங்கைத் தமிழர்களுக்காக மேற்கொண்டுள்ள போராட்டம் தவறு என்று கருத்து தெரிவித்த மதுரை மாவட்ட நீதிபதியை வழக்கறிஞர்கள் கண்டித்துள்ளனர். தமிழகம் முழுவதும் நடைபெற்றுவரும் மாணவர்களின் போராட்டத்துக்கு மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று  வழக்கு ஒன்றை விசாரித்த 4-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ராஜலிங்கம்,  ''இங்கு எதற்காக போராட்டம் நடத்துகிறீர்கள்? இலங்கையில் போய் போராட்டம் நடத்துங்கள். இலங்கைத் தமிழர்களுக்காக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவது தவறு, அதனால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்'' என்றும் கருத்து தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து, இன்று காலை வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினர், நீதிபதி பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று  சொல்லி அவரது கோர்ட்டை புறக்கணித்தனர். இதனிடையே, நீதிபதி ராஜலிங்கத்தின் 4-வது குற்றவியல் நீதிமன்றத்துக்கு இன்று காலை மர்ம நபர்கள் பூட்டு போட்டுள்ளனர். இதைச் செய்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இந்தச் சம்பவம், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...