|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 March, 2013

இலங்கையில் பிரமாண்டமாக உருவாகும் கலாநிதி மாறனின் ஸ்பைஸ்ஜெட்!இலங்கையில் முன்னாள் திமுக மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலம் மிக பிராமாண்ட அளவில் கட்டப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் இறுதிகட்டப் போரின் போது தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் கொத்துக் குண்டுகளையும், பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசியது. போர் நடந்தபோது இந்திய நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. தயாநிதி மாறன் பேசினார். இலங்கையின் மீது போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று மத்திய அரசை கேட்டுக் கொண்டார். அப்போது அவரது குரல் கம்மியது. அவரது பேச்சுக்கு அனைத்து திமுக உறுப்பினர்களும் கை தட்டி பாராட்டு தெரிவித்தனர். ஆனால் போருக்கு பின்பு தயாநிதி மாறன் குடும்பத்திற்கு சொந்தமான ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் இலங்கையுடன் ஒப்பந்தம் செய்துக் கொண்டது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வாரம் 4 முறை ஸ்பைஸ்ஜெட் விமான போக்குவரத்து நடைபெறுகின்றதாம். சிங்கள வியாபாரிகள் தமிழகம் மற்றும் இந்தியாவுக்கு வந்து போக ஸ்பைஸ்ஜெட் விமானம் தங்களுக்கு ஏதுவாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்களாம். ஸ்பைஸ்ஜெட் விமான அலுவலகம் செயல்பட கொழும்பில் பிரமாண்டமான கட்டிடம் கட்டிக் கொண்டிருக்கிறார்களாம். இதற்கு மேல் உண்மைகளை மக்கள் முன்பு விளக்க வேண்டியது தயாநிதி மாறனின் கடமையாகும்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...