|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 March, 2013

இவன் ஒருவனை அனுப்பினால்?

தமிழனை தரக்குறைவாய் பேசும் நாய்களை மென்னு முழுங்கி தண்ணி குடிக்க வைக்கும் தமிழின தலைவன். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விவசாயிகள் பிரச்னைக‌ளுக்காக விருதுநகரில் நாளை ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கிறார். சிவகாசி மக்களவை (இப்போது விருது நகர்) தொகுதியில் இதற்கு முன்பு எம்.பி. தேர்தலில் நின்று வெற்றிபெற்ற வைகோ, கடந்த முறை தோல்வியை தழுவினார். இப்போது இது காங்கிரஸ் தொகுதியாக இருந்தாலும், சிவகாசியில் உள்ள‌ வைகோவின் எம்.பி. அலுவலகம் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. சமீபகாலமாக விருதுநகர் தொகுதியில் அடிக்கடி சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு கட்சியினரை சந்தித்தும் வருகிறார் வைகோ. இந்நிலையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி நாளை (மார்ச் 14 ) விருதுநகரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறார் வைகோ. இந்த திடீர் அறிவிப்பால் மீன்டூம் வைகோ விருதுநகரில் போட்டியிடப் போகிறார் என்று ஆருடம் சொல்கிறார்கள் ம.தி.மு.க.வினர். 

இது தொடர்பாக விகடன் டாட் காமிடம் பேசிய அவர்கள், ''வைகோவுக்கு தூத்துக்குடி, விருதுநகர் லோக்சபா தொகுதியில் நல்ல செல்வாக்கு உண்டு. இதை பல்ஸ் பார்க்கும் விதமாகத்தான் தமிழகத்தில் பூரண மது விலக்கை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் உவரியிலிருந்து பாதயாத்திரை தொடங்கி, விருதுநகர் லோக்சபா தொகுதி முழுவதும் நடை பயணம் மேற்கொண்டு, மக்களை சந்தித்து மதுரையில் யாத்திரையை முடித்தார். அடுத்தபடியாக இப்போது விருதுநகரில் விவசாயிகள் பிரச்னைகளுக்காக உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார். எனவே விருதுநகர் தொகுதியில் வைகோ மீண்டும் களமிறங்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது" என்றனர் உற்சாகமாக! 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...