|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 March, 2013

எல்லாருமே திருடங்கதான்


அதிரடி நாயகன்' என அழைக்கப்படும் ஜாக்கிசான் சுங்கக் கட்டணம் மற்றும் இதர சாலை வரிகளை ஏய்க்கும் வகையில் ராணுவ நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட காரை பயன்படுத்தும் புகைப்படம் சீனர்களிடையே கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. 'டுவிட்டர்' போன்ற சீனாவின் புகழ்பெற்ற சமூகவலைத் தளமான 'வெய்போ'-வில், ராணுவ நம்பர் பிளேட் பொருத்தப்பட்ட காரில் 2 இளம்பெண்களுடன் ஜாக்கிசான் ஏறுவதைப் போன்ற புகைப்படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. ராணுவ வாகனங்களுக்கு சோதனைச் சாவடிகளில் சுங்கவரிக்க விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் அவர் ராணுவ நம்பர் பிளேட் கொண்ட காரை பயன்படுத்தி இருக்கலாம் என சிலர் வெய்போ-வில் கருத்து வெளியிட்டுள்ளனர். இன்னொரு விமர்சகரோ, மிக ஆழமாக யோசித்து, 'சீன வீரர்களுக்கு தற்காப்பு கலையை கற்றுத்தருவதற்ககாக ராணுவம் ஜாக்கிசானை புதிதாக பணியமர்த்தியுள்ளதோ..என்னவோ..?' என நையாண்டி செய்துள்ளார். 


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...