|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 April, 2013

கணவனை கொல்லத் துடிக்கும் மனைவி! மனைவியை கொன்ற கணவன்?எந்திர உலகில் பணத்தின் பின்னால் ஓடும் மனிதர்களால், குடும்ப உறவுகள் உடைந்து வருகின்றன. உறவுகளுக்கிடையே பாசம் குறைந்து, துரோகங்கள் அதிகரிப்பதே இதற்கு காரணமாக இருக்கலாம். அதிலும் குறிப்பாக கணவன், மனைவி உறவுக்கிடையே, விரிசல்கள் ஏற்பட்டு, கடைசியில் அது கொலை வரை கூட செல்லும் கொடூரமாகிறது. கிருஷ்ணகிரியில், மனைவி, கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததைப் பார்த்த கணவர் ஆத்திரத்தில் இருவரையும் கொலை செய்தார். அதேபோல் நாமக்கல்லில் கள்ளக்காதலை கண்டித்த கணவரை மனைவி கொல்ல முயன்ற சம்பவமும் நடந்துள்ளது. மனைவியை கொன்ற கணவன்: கிருஷ்ணகிரி அடுத்த சூளாமலை மேல்கொட்டாயை சேர்ந்தவர் சின்னதம்பி (35). இவரது மனைவி கீதா (32). இவர்களுக்கு 10 ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு லதா (7), ஆகாஷ் (5) என்ற இரு குழந்தைகள் உள்ளனர். சின்னதம்பி பெங்களூருவில் வேலை செய்து வந்துள்ளார். கீதா மட்டும் தனது குழந்தைகளுடன் மேல்கொட்டாயில் தனியாக வசித்து வந்தார். கீதாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த சின்னத்தம்பியின் உறவினர் கோவிந்தராஜ் (35) என்பவருக்கும் இடையே கடந்த ஒன்பது ஆண்டாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

 கடந்த, 27-ம் தேதி கடைக்கு செல்வதாக கூறி சென்ற கீதா வீடு திரும்பவில்லை. இரண்டு நாட்கள் கழித்து சின்னதம்பியின் வீட்டுக்கு அருகே உள்ள குகன் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் இல்லாத கிணற்றில் கீதா கழுத்து அறுப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் கழித்து கள்ளக்காதலன் கோவிந்தராஜ், கீதா படுகொலை செய்யப்பட்டு கிடந்த கிணற்றுக்கு அருகில் இருந்த குட்டையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் விஷ பாட்டில்களுடன் இறந்து கிடந்தார். விசாரணையில் வீட்டுக்கு அருகே உள்ள பாறையில் கீதாவும், கோவிந்தராஜும் உல்லாசமாக இருந்ததை பார்த்து, ஆத்திரமடைந்து சின்னதம்பி, அவரது அண்ணன் கிருஷ்ணன் , உறவினர் தர்மன் ஆகியோருடன் மூன்று பேரும் சேர்ந்து கீதாவையும், கோவிந்தராஜையும் கத்தியால் குத்தியும், பிளேடால் கழுத்தை அறுத்தும் கொலை செய்தது தெரிய வந்தது. போலீஸாரை திசை திருப்புவதற்காக கீதாவை கொலை செய்துவிட்டு கோவிந்தராஜ் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியதும் அம்பலமானது. 

இந்நிலையில், தலைமறைவான சின்னதம்பி, கிருஷ்ணன், தர்மன் ஆகியோர் நேற்று காலை கந்திகுப்பம் வி.ஏ.ஓ., பொன்னுரங்கம் முன்னிலையில் சரண் அடைந்தனர். அவர்களை போலீசார் நீதிமன்ற காவலுக்கு அனுப்பியுள்ளனர். கணவனை கொல்ல முயற்சி: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (52). முதல் மனைவியை பிரிந்த குணசேகரன், விஜயா (35), என்பவரை இரண்டாம் திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு, ஆண், பெண் என குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், குணசேகரனின் கடையில் பணிபுரியும் ஈரோட்டை சேர்ந்த கதிர்வேல் (36), என்பவருடன் விஜயாவுக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த குணசேகரன், மனைவி விஜயாவை கூப்பிட்டு இந்த கூட நட்பை கைவிடும்படி கூறி இருவரின் நடவடிக்கையும் கண்டித்துள்ளார். அதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆனாலும், விஜயாவின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படாமல் இருந்ததால் கணவன் மனைவி இடையே மீண்டும் சண்டை வந்துள்ளது.

 வழக்கம் போலவே, நேற்று காலை இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த விஜயா வீட்டில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியால், கணவர் குணசேகரனின் கழுத்தில் குத்தி, கழுத்தை பிடித்து அறுத்துள்ளார். குணசேகரன் போட்ட சத்தம் கேட்டு அக்கம் பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்து விஜயாவிடம் இருந்து குணசேகரனை காப்பற்றியுள்ளார் அதில், காயமடைந்த குணசேகரன் ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி விஜயாவை, குமாரபாளையம் போலீஸார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...