|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 June, 2013

பவருக்கு பதில் சகலகலா டெரர் ஸ்டார்!

 
பவர் ஸ்டார் ஆஃபிசியலாக டெல்லி வரை போயிருக்கிறார் அல்லவா... (கோடம்பாக்கத்தில் இப்போது அப்படித்தான் சொல்லிக் கொள்கிறார்கள்!). இதனால் பவர் ஸ்டார் ஒப்பந்தமாகியிருந்த ஏகப்பட்ட படங்களில் அவருடைய போர்ஷனில் யாரை நடிக்க வைப்பது... அல்லது பவர் சிறைவாசம் முடிந்து வரும்வரை காத்திருப்பதா என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இவர்களில் ராம நாராயணனும் ஒருவர். பவரை ஹீரோவாக வைத்து ஆர்யா சூர்யா என்ற படத்தை எடுத்துவருகிறார். பவரை வைத்து ஏகப்பட்ட காட்சிகளை ஷூட் பண்ணிவிட்டார். இப்போது கடைசி கட்டத்தில் பவர் ஸ்டார் இல்லை. இப்போது இதற்கும் ஒரு அப்பாடக்கர் ஐடியா வைத்திருக்கிறார் ராம நாராயணன். பவர் ஸ்டார் பகுதிகளை எடுத்தவரைக்கும் அப்படியே வைத்துக் கொண்டு, மீதிக் காட்சிகளுக்கு, பத்து பவர் ஸ்டார்களை உள்ளுக்குள் வைத்துக் கொண்டு அல்லாடிக் கொண்டிருக்கும் டி ராஜேந்தரை பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். டிவி சீரியல்களில் ஒத்து வராத நடிகரை சாகடித்துவிட்டு அல்லது அவருக்கு பதில் இவர் நடிப்பார் என்று டைட்டில் கார்டு போடுவது போல போட்டுவிட்டு, டிஆரை நடிக்க வைக்கப் போகிறாராம்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...