|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 June, 2011

சேனல் 4 ஆவணப்படத்தை பரிசோதிப்போம்: இலங்கை அரசு!


விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்டப் போரில் நிகழ்ந்தவை தொடர்பாக சேனல் 4 வெளியிட்டுள்ள ஆவணப் படத்தை நிபுணர்களை வைத்து பரிசோதிக்கவுள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 'இலங்கையின் கொலைக்களங்கள்' (Sri Lanka's Killing Fields) எனப் பெயரிடப்பட்ட சேனல் 4-ன் 50 நிமிட ஆவணப் படம், போர்க் குற்றங்களுக்கான மிக முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. இப்படம் நேற்று வெளியிடப்பட்டது.


இதுகுறித்து இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல அளித்த பேட்டியில், " இந்த ஆவணப் படத்தை நாங்கள் மிகவும் கவனமாக பரிசோதிப்போம். எங்களது தடயவியல் நிபுணர்களும், வெளிநாட்டு நிபுணர்களும் பரிசோதனையில் ஈடுபடவுள்ளனர். அதற்குப் பிறகு இதுகுறித்து பதில் தெரிவிப்போம்.

அதற்குள்ளாக பதில் கூறுவது காலத்துக்கு முந்தைய செயலாக அமையும். 2009-ம் ஆண்டிலும் சேனல் 4 இதுபோன்ற வீடியோ ஒன்றை ஒளிபரப்பியது. அது போலியானது என நிரூபிக்கப்பட்டுள்ளது," என்றார் அவர்.  அதேநேரத்தில், தற்போது வெளியாகியுள்ள ஆவணப் படத்தை போலியானது என்று இலங்கை ராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது.

இந்த ஆவணப் படம், இலங்கை ராணுவத்தின் மீது சர்வதேச அளவிலும், உள்ளூர் மட்டத்திலும் தவறான பார்வையை ஏற்படுத்தாது என்று இலங்கை பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, சேனல் 4 ஆவணப் படத்தில் காட்டப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் உண்மை என்பது தெரியவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று லண்டனில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...