|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 June, 2011

இன்டிகோ - வெளிநாட்டு விமான சேவையை ஆரம்பிக்கிறது

இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இன்டிகோ, வரும் செப்டம்பர் முதல் வெளிநாட்டு சேவையை தொடங்குகிறது.
முதல் கட்டமாக செப்டம்பர் 1-ம் தேதி டெல்லி - துபாய் சேவையையும், செப்டம்பர் 15-ம் தேதி டெல்லி- பாங்காக் மற்றும் அக்டோபர் 2-ல் டெல்லி - சிங்கப்பூர் சேவையையும் இந்த நிறுவனம் தொடங்குவதாக அறிவித்துள்ளது.

"இந்த மூன்று மார்கங்களில் பயணிப்போரிடம் கட்டண வித்தியாசம் காட்டாமல், ஒரே கட்டணத்தை வசூலிக்கிறது இன்டிகோ என்பதுதான் ஸ்பெஷல். டெல்லியிருந்து, துபாய், சிங்கப்பூர் அல்லது பாங்காக் என எந்த ரூட்டில் போனாலும் கட்டணம் ரூ 9999 மட்டும்தான்," என்கிறார் இன்டிகோ தலைவர் ஆதித்ய கோஷ்.

இந்த சலுகைக் கட்டணம் முதல் 25000 இருக்கைகளுக்கு தரப்படுகிறது. டெல்லி விமான நிலையத்தின் டெர்மினல் 1டி மற்றும் 1 சியிலிருந்து இன்டிகோ சர்வதேச விமானங்கள் இயக்கப்படும். அடுத்த ஆண்டு கொல்கத்தாவிலிருந்து டாகா மற்றும் பாங்காக்கு புதிய விமானங்களை இயக்குவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் இன்னும் விமான சேவை துவங்கப்படாத 34 சதவீத செக்டார்களில் புதிய சேவையைத் தொடங்கவும் இன்டிகோ முடிவு செய்துள்ளது.

2006-ல் சேவையைத் துவங்கிய இன்டிகோ, 39 விமானங்களுடன் இந்தியாவின் 26 நகரங்களுக்கிடையே இயங்கி வருகிறது. நாளொன்று 250 விமான சேவைகளைத் தரும் இந்த நிறுவனம், வரும் 2015-க்குள் 100 ஏர்பஸ்களை வாங்க ஆர்டர் கொடுத்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...