|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 July, 2011

மாஜி அமைச்சர் நேரு மீது ஹோட்டல் அபகரிப்பு புகார்!


போலி ஆவணங்களை காட்டி ரூ.15 கோடி மதிப்புள்ள ஓட்டலை அபகரித்து விட்டதாக முன்னாள் திமுக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரசு சகோதரர் ராமஜெயம் மீது திருச்சி காவல்துறையில் தொழிலதிபர் புகார் தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் கதிர்வேல் கடந்த 2005ம் ஆண்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பிரபல ஓட்டலை (ஓட்டல் காஞ்சனா). ஓப்பந்தத்தின் அடிப்படையில் வாங்கினார். இந்த ஓட்டலுக்காக வாங்கப்பட்ட கடனையும் அடைத்துக்கொள்வதாக அந்த ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. அதன்படி கடந்த 2007ம் ண்டு டிசம்பர் மாதம் வரை அந்த ஓட்டலை நடத்தி வந்தார். 
ஆனால் 2007ம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ந்தேதி நள்ளிரவு அப்போதைய திமுக அமைச்சர் கே.என்.நேரு, அவரசு சகோதரர் ராமஜெயம், மாநகராட்சி துணைமேயர் அன்பழகன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ரவுடிக்கும்பல் ஓட்டலுக்குள் புகுந்தது. போலியான ஆவணங்களை தயார் செய்து கடந்த 2005ம் ஆண்டு முதல் பராமரித்து வருவதாக கூறி தொழிலதிபர் கதிர்வேலுவை கொலை மிரட்டல் விடுத்து ஓட்டலை அபகரித்துக்கொண்டனர்.

இதுகுறித்து அப்போதைய காவல்துறையிடம் 2007டிசம்பர் 24ந்தேதி புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால் மிரட்டலுககு பயந்து ஓட்டலை அவர்களிடம் விட்டுவிட்டு உயிருக்குப்பயந்து தப்பிச்சென்று விட்டனர். தற்போது தமிழக முதல்வர் தலைமையிலான அரசு கடந்த திமுக ஆட்சியில் நில அபகரிப்பு குறித்த புகார்களை நேர்மையான முறையில் காவல் துறை விசாரணை நடத்தி மீட்டுத்தருவதையடுத்து, நேற்று திருச்சி மாநகர காவல்துறையில் தொழில் அதிபர் கதிர்வேல் புகார் அளித்துள்ளார். முன்னாள் திமுக அமைச்சர் மற்றும் சகோதரர் உள்ளிட்ட திமுகவினர் மீது தொழில் அதிபர் புகார் அளித்துள்ளது திருச்சி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓட்டலின் தற்போதைய மதிப்பு சுமார் ரூ.30கோடி என கூறப்படுகிறது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...