|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 July, 2011

நீண்ட ஆயுள் தரும் தாம்பத்யம்!

ஆரோக்கியமான தாம்பத்ய வாழ்க்கை மூலம் நீடித்த ஆயுளை பெறமுடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நம்பிக்கைக்குரிய ஒருவருடன் மட்டும் தொடர்ந்து தாம்பத்ய உறவில் ஈடுபட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். அதேசமயம், பல்வேறு பெண்களுடன் சகட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாது என்று இத்தாலியைச் சேர்ந்த ஆய்வாளர் இமானுவேல் ஜனினி தெரிவித்துள்ளார்.

வாழ்நாள் நீடிக்கும்

உறவு கொள்ளும் பெண் மீ்து மிகுந்த நம்பிக்கையும், பூரண திருப்தியும் வைத்திருக்கும் ஆண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை இனிதாக அமைகிறது. இப்படிப்பட்டோர் தொடர்ந்து செக்ஸ் வாழ்வில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு இதயக் கோளாறுகள் வருவது குறைகிறது, வாழ்நாளும் நீடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

முறையான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போருக்கு இதயநோய்கள் ஏற்படுவதில்லை என்பதால் மாரடைப்பு எட்டிப்பார்ப்பதில்லை. இதன் மூலம்தான் அவர்களுக்கு ஆரோக்யமான உடல் நலமும், நீடித்த ஆயுளும் சாத்தியமாகிறதாம்.

மன அழுத்தம் குறையும்: செக்ஸ் உறவில் தொடர்ந்து அதிக அளவில் ஈடுபடும்போது ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிகரித்த அளவிலும் உள்ளது. இதன் மூலம் மன அழுத்தம் அவர்களுக்குக் குறைகிறது. இது உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது என்கிறார் ஜனினி.

ஆண்களுக்கு செக்ஸ் உறவின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மிகவும் நன்மை பயக்கக் கூடியது. தேவையில்லாத சர்க்கரையை அது குறைக்கிறது. இது இருதயத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிக அளவில் உடலுறவுகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அது அவர்களது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது என்கிறார் ஆய்வாளர்.

முறையற்ற உறவு: உடல் தேவைக்காக மட்டுமே பல்வேறு பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்வோருக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம். குறிப்பாக கள்ளக் காதலில் ஈடுபடுவோருக்கு மன அழுத்தம் மிக அதிகமாக இருக்குமாம். யாருக்காவது தெரிந்து விடுமோ என்ற பயத்திலும், பதட்டத்திலும் இருப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு, இருதயக் கோளாறுகளும் சீக்கிரமே வந்து சேருகிறதாம்.

உடல் ஆரோக்கியம் கருதிதான் நமது முன்னோர்கள் பிறன் மனை நோக்குவதை பாவம் என்று தெரிவித்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...